ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 22.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 22.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 22, 2024, குரோதி வருடம் வைகாசி 9, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். சூழலை புரிந்து கொண்டு சிந்தனையுடன் செயல்படவும். எந்த ஒரு முக்கிய முடிவுகளிலும் அவசரம் காட்டாமல் கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் நிதி நிலைமையை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இன்று உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலனை தரக்கூடிய நாள். உங்களின் வேலை பாராட்டப்படும். மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள். குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். இன்று நண்பர்களின் நல்ல ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் ஆரோக்கியம் எந்த ஒரு செயலையும் செய்து முடித்த சாதகமாக இருக்கும். இன்று உங்கள் திட்டமிட்ட வேளையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று விரும்ப தகாத சில நிகழ்வுகள் நடக்கும். உங்கள் வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். உங்களின் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டிய நாள். உங்களின் குடும்ப பொறுப்புகள் மற்றும் வேலைகளை நிறைவேற்ற உங்களின் எண்ணங்களை கட்டுப்படுத்துவதும். கவனத்துடன் செயல்படுவதும் அவசியம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உடற்பயிற்சி மற்றும் தியானம், யோகா போன்றவற்றை செய்வது நல்லது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று சில அழகான அனுபவங்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றி வாய்ப்பை பெறுவீர்கள். உங்களின் வேலையில் புதிய உயரங்களை அடைவீர்கள். உங்களின் தொழிலில் பணம் சம்பாதிக்கப்பட வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார முயற்சிகள் நல்ல வெற்றியை பெறக்கூடியதாக இருக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாள். கவனமாகவும், திட்டமிட்டும் செயல்பட சிறப்பான பலனை அடைந்து விடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். இன்று உங்களின் வருமானத்தில் மாற்றங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான விஷயத்தில் கவனமாக இருக்கவும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் தொழிலில் பொறுமையை கையாள்வது நல்லது. இன்று வழக்கமான நாளை விட கவனமாக எந்த ஒரு வேலையும் செய்து முடிப்பது அவசியம். உங்களின் சிறப்பான செயல்பாட்டால் குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.. வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நற்பலனை தரக்கூடியதாக இருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றியை பெறுவீர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அது உங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்ப வாழ்வில் பிரச்சனைகளை கவனமாக அணுகவும். இன்று விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். முக்கிய விஷயங்களை அர்ப்பணிப்புடன் செயல்படுவது அவசியம். அதன் மூலம் நிதி விஷயங்களில் நல்ல பலனை அடையலாம். உங்கள் வாழ்க்கையில் பல வெற்றிக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும், இலக்குகளை அடையவும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் ஆர்வத்துடன் செயல்படுவது அல்லது. இன்று புதிய திட்டத்தின் பொறுப்புகளை ஏற்க வாய்ப்பு உள்ளது. பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உங்களின் முதலீடுகள் நல்ல லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். காதல் பறவைகளுக்கு சிறப்பான நாள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் உண்டாகும். வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது. இன்று வியாபாரத்தில் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. அதனால் பொறுமையுடன் செயல்படுவோம். இன்று குடும்பத்திற்காக அதிகமாக செலவிட நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். இன்று உடற்பயிற்சி செய்வது நன்மை தரும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சற்று சாதகமான நாள். இன்று திடீரென சில பொறுப்புகள் உங்கள் மீது வரும். கவனமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது அவசியம். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று மற்றவர்களை பார்த்து பயப்பட வேண்டியதில்லை. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் ஆளுமை மேம்படும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல பலன்கள் தரக்கூடிய நாள். உங்களின் சிறப்பான செயல்பாட்டால் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். காதல் உறவில் புரிதல் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் அடைய புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இன்று புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கவும். வாழ்க்கையில் புதிய உறவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண முயற்சியில் நல்ல வரன் அமையும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு விருப்பமான பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், செயல்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

Exit mobile version