ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அன்றாட வேலையில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில், உணவு விஷயத்தில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் காதல் நிறைந்திருக்கும். உத்தியோகஸ்தர்கள் என்ற சில வேலைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். உங்களின் பணி பாராட்டுக்குரியதாக இருக்கும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும், அதே சமயம் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களின் குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையில் ஏற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் சில ஏமாற்ற நபர்கள் பிரச்சனை தர வாய்ப்புள்ளது. முதலீடுகள் விஷயத்தில் கவனமாக ஆராய்ந்து செயல்படவும். இன்று வியாபாரத்தை வளர்க்க உங்களின் நேரமும், சக்தியும் அதிகமாக தேவைப்படும். இன்று உங்களுக்கு சவாலான நாளாகவே அமையும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகச் சிறப்பான நாள். உங்கள் வேலையில் நல்ல வெற்றியை பெறலாம். உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். நிதிநிலை மேம்படும். உற்றிய வகுப்பில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் பெரிய வெற்றியை பெறுவார்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களின் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்களின் நிதிநிலை ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். சொத்து தொடர்பான பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
​காலையில் எழுந்தவுடன் இந்த 5 தவறுகளை செய்தால் வாழ்நாள் முழுவதும் பிரச்சினை தான் ஏற்படும்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் பெரிய வெற்றிகளை பெறலாம். பணியிடத்தில் புதிய திட்டத்திற்கான விஷயத்தில் பொறுப்பு ஏற்று செயல்படுவீர்கள். நீங்கள் இன்று ஆர்வத்துடன் எந்த ஒரு முயற்சி செய்தாலும் நல்ல பலனை பெறலாம். முதலீடுகள் சார்ந்த விஷயத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். இன்று பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விஷயத்தில் நெருக்கம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறவின் ஆழம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அணுகூலமான பலன் தரக்கூடிய நாள். இன்று உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். வேலையில் நிதானமாக எந்த ஒரு செயலையும் செய்யவும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம். என்று சரியாக திட்டமிட்டு செயல்பட இலக்குகளை சிறப்பாக அடைவீர்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை.. வேலையில் ஸ்திரத் தன்மை பராமரிப்பது அவசியம். நிதி விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
​வார ராசிபலன்: மே 13 முதல் 19 வரை – மேஷம் முதல் கன்னி வரை வெற்றி தேடி வரும்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழில் சார்ந்த விஷயத்தில் கவனமாக செயல்படவும். வேலை தொடர்பான பிரச்சனைகள் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இழப்புகளை சந்திக்க நேரிடும். இன்று முதலீடுகள் விஷயத்தில் கவனம் தேவை. காதல் விஷயத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். உங்களின் கனவுகள் நனவாக்க வாய்ப்புள்ளது. வியாபாரம், தொழில் விஷயத்தில் பொன்னான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். மங்களகரமான விஷயங்கள் வீட்டில் நடக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் பெற நல்ல வாய்ப்புகள் அமையும். அன்புக்குரிய அவர்களுடன் நேரத்தை சில விடலாம். என்று எந்த விஷயத்திலும் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் உகந்த நாளாக அமையும். வேலையில் பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். வியாபாரம், தொழிலில் வழக்கத்தை விட கூடுதல் லாபத்தை பெறலாம். குடும்பம் மற்றும் வேலை தொடர்பான விஷயத்தில் அதிக பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். கோபம் மற்றும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். படிப்பு விஷயத்தில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மிக சாதகமான நாளாக இருக்கும். இன்று புதிதாக திட்டமிட்டு செயல்படுவதை விட, பழைய விஷயங்களை வேகமாக செய்து முடிக்க முயலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று உங்களின் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கலாம். என்று உங்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற உறுதியாக செயல்படுங்கள். கடின உழைப்பின் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். நிதி ரீதியாக சவாலான நாளாக அமையும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக அமையும்.. வாழ்க்கையில் மறக்க முடியாத சில நற்பலனை பெறுவீர்கள். உங்களின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மேம்படும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் மும்முரமாக இருப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியை பெறலாம். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையிலும் பொறுப்பை உணர்ந்து செயல்பட இன்று வெற்றி நிச்சயம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் செயலில் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படவும். குடும்பம் மற்றும் வேலை தொடர்பான விஷயத்தில் புரிந்துள்ள உடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் பணம் சம்பாதிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். முதலீடு விஷயத்தில் கவனமாக முடிவுகளை எடுக்கவும். இன்று விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றியை பெற்றிடலாம். வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் எளிதாக சமாளிக்க முடியும். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் நல்ல ஆதரவை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு பிடித்த உணவு ருசிக்க வாய்ப்பு உள்ளது. இன்று புதிய முதலீட்டில் ஈடுபடலாம். அதேபோல் பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தையும் பெறலாம். உடல் நலனில் அக்கறை தேவை. எந்த ஒரு செயலிலும் நம்பிக்கை அதிகரிக்கும்.

Exit mobile version