ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 20.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 20.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் மார்ச் 20, 2024, சோபகிருது வருடம் பங்குனி 7, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக புதிய நற்செய்திகள் வரும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைப்பளு, அழுத்தம் குறையும். புதிய வேலை, திட்டங்களை செயல்படுத்தலாம். இன்று பயணங்கள் இனிமையானதாகவும், அனுபவமானதாகவும் இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். இன்று எந்த விஷயத்திலும் பிடிவாதமாக, கர்வத்துடனும் இருக்க வேண்டாம். அதிகமாக கவலைப்பட்ட வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். பல பிரச்சினைகள் தீரும். இன்று யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் பெரிய இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்காக முடிந்த வரை அதிக முயற்சி செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சிறப்பாக தீர்க்க முடியும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மும்முரமாக செயல்படுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு வருந்த வேண்டியிருக்கும். இன்று உங்கள் வேலைகளை சரியாக முடிக்க கவனமும், கடின உழைப்பும் தேவைப்படும். இது உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் மேன்மை தரக்கூடிய பலன்களை பெறுவீர்கள் . பிள்ளைகளின் வாழ்க்கை தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். இன்று ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் .
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு திடீர் லாபங்கள் கிடைக்க கூடிய நாளாக இருக்கும். மற்றவர்களிடம் சிக்கியுள்ள உங்களின் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் நலனில் அக்கறை செலுத்தவும். எந்த ஒரு ஆபத்தான வேலையையும் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையான சூழல் இருக்கும். இன்று வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணியிடத்தில் எதிரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். புத்திசாலித்தனமாக செயல்படவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். முதலீடு தொடர்பான விஷயங்களில் பணத்தை செலவு செய்வீர்கள். இன்று உங்களின் வேலையில் பெரிய மாற்றம் இருக்கும். வேலை தொடர்பாக மிகுந்த சிந்தனையுடன் செயல்படவும் .தொழில் தொடர்பான பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை மீது அக்கறையுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேற்றம் தரக்கூடிய நாள். காதல் வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்க கூடிய நாள். தனிப்பட்ட விஷயங்கள் மேம்படுத்திக் கொள்ளக்கூடிய நாள். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இன்று செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீடு, வேலை இரண்டையும் சமாளிக்க சிரமம் ஏற்படும். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் கிடைக்கக்கூடிய நாள். உங்களின் கலைத்திறன் மேம்படும். பணியிடத்தில் குறையுடன் செயல்படுவீர்கள். உங்களின் முடிவு எடுக்கும் திறன் சிறப்பானதாகவும், அதன் மூலம் முழு பலனையும் பெறுவீர்கள். நிதிநிலை தொடர்பான விஷயங்களில் சிறப்பான நாளாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்போம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இன்று உங்களின் வேலையில் சிலர் தடை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இன்று சில செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் மற்றவர்களின் ஒருங்கிணைப்பு கிடைக்கும்.