ஜோதிடம்

பாவங்களை போக்கும் மகா சிவராத்திரி! 5 ராசியினருக்கு அடிக்கப்போகும் பேரதிஷ்டம்

Published

on

பாவங்களை போக்கும் மகா சிவராத்திரி! 5 ராசியினருக்கு அடிக்கப்போகும் பேரதிஷ்டம்

வருடத்தில் எத்தனை சிவராத்திரிகள் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி சிறப்புக்குரியது.இதற்கமைய , இந்த ஆண்டு மார்ச் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ளது.

இந்த சிவராத்திரியன்று கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல் நோக்கி நகரசெய்கிறது. அதனால் அன்றையதினம் விழித்திருந்தால் எமது உயிர்சக்தி மேல்நோக்கி நகரும் என முன்னோர்களும் சித்தர்களும் கூறியுள்ளனர்.

சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி நாள் முக்கியமானதாக உள்ளது.

சிவராத்திரி வழிபாடு
இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை இரண்டாவது கால பூஜை, இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை நான்காவது கால பூஜை. இதில் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை லிங்கோத்பவ காலமாகும்.

சிவராத்திரியை ஐந்து வகையாக சொல்வார்கள். அது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி’ என்று வழிபடுகிறோம்.

அன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து மாலை முதல் மறுநாள் காலை வரை நான்கு யாமங்களிலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரங்களை சொல்லி, 11 திரவியங்களால் (வாசனை தைலம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் சுத்தமான நீர் கொண்டு அல்லது விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்படும்) சிவபெருமானை அபிஷேகித்து வழிபடுவார்கள்.

மகாசிவராத்திரி ராசி பலன்கள்
இந்நிலையில், சுக்கிர பகவான் மற்றும் புதனின் சேர்க்கையானது சிவராத்திரிக்கு முன்னர் நடக்க உள்ளதால் சில ராசியினருக்கு பல விதத்தில் அதிர்ஷ்டமும், பண பலமும் கிடைக்கவுள்ளதோடு சில ராசியினருக்கு சிவனின் பலன் கிடைக்கும்.

அதற்கு முன் வரை கும்ப ராசியில் சுக்கிரன், சூரியன், சனி சேர்க்கையானது தொடர்கிறது. இதன் காரணமாக 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டப்போகின்றது.

எந்தெந்த ராசியினருக்கு என்ன பலன்கள் என பார்க்கலாம்.

ரிஷபம் ராசி

ரிஷப ராசி அதிபதியான சுக்கிர பகவானும், புதனும் 10 மற்றும் 11ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார்கள். சுக்கிரனும், புதனின் சேர்க்கையானது நிதி நிலையில் ஏற்றம் தரக்கூடியதாக இருக்கும். இரும்பு தொழில், வங்கி தொடர்பான விஷயங்களில் வருவாய் அதிகரிக்கும். உங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குடும்ப பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

மிதுன ராசி

மிதுன ராசி அதிபதியான புதனுடன் சுக்கிரன் சேர்க்கையானது கும்பத்திலும், மீன ராசியிலும் நடக்கிறது. பாக்கிய ஸ்தானம், கர்ம ஸ்தானத்தில் நடக்கும் இந்த கிரக சேர்க்கையானது பல வகையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் பயணங்கள் பல வகையில் அனுகூல பலனை தரும். வேலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்கு சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையானது புண்ணிய ஸ்தானம் மற்றும் நோய், எதிரி ஸ்தானத்தில் மாற உள்ளது. இதன் காரணமாக துலா ராசியினருக்கு கல்வி மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் வெற்றியை அள்ளித் தரும். உங்கள் உறவில் முன்பை விட அன்பும், மரியாதையும் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல விஷயம் நடக்கும். உங்கள் எதிரிகளை சிறப்பாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நீங்கள் வீண் சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினருக்கு சுக ஸ்தானம், புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரனின் சஞ்சாரம் நடப்பதால் உங்களுக்கு பூர்வீக சொத்து சேரும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை வெற்றி வாய்ப்பை அள்ளித் தருவதாக இருக்கும். நீங்கள் திட்டமிட்ட வேலைகளை செய்து செல்வத்தை அடைவீர்கள். உங்களின் இல்லற மகிழ்ச்சி அதிகரிக்கும். வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

கும்ப ராசி\

மகாசிவராத்திரி தினத்திற்கு முன் நடக்கும் புதன், சுக்கிரன் சேர்க்கை மற்றும் பெயர்ச்சி காரணமாக உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றமும், குடும்ப ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உங்களின் பொருள் சார்ந்த விருப்பங்கள் நிறைவேறும். வருமான வாய்ப்பு உயரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பல விதத்தில் மன ஆறுதலை தரும். உங்களின் பேச்சு, நடத்தையை நிதானமாக வைத்துக் கொண்டால் அதன் மூலம் நல்ல வெற்றியை பெற்றிடலாம்.

Exit mobile version