ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 07.03.2024 – Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 07.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 07, 2024, சோபகிருது வருடம் மாசி 24, வியாழக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதாரண நாளாகும். உங்கள் வழக்கப்படி அனைத்து பணிகளையும் சரியாக முடிப்பதால், நிம்மதியாக உணர்வீர்கள். அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதற்கு உங்க ஆரோக்கியமும் ஒத்துழைக்கும்.
எங்கிருந்தோ திடீரென்று பணம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சற்று பதற்றம் காணப்படும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்வில் அன்பை உணர்வார்கள், காதலிப்பவர்கள் மன அழுத்தத்தை சந்திப்பார்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் மனம் ஒரே இடத்தில் இருக்காது. ஒரே நேரத்தில் பல திட்டங்களை பற்றி நீங்கள் யோசிப்பீர்கள். உங்கள் வேலையில் தடைகள் வரலாம். உங்கள் நண்பரான அனுபவமுள்ள ஒருவரின் உதவியை பெறுவீர்கள்.
வேலை சம்பந்தமாக நல்ல பலன்களை தரும் நாள் இன்று. ஆனால், மனதில் தெரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருந்தாலும் இன்று கடினமாக உழைக்க வேண்டி வரும். உங்கள் ஆரோக்கியமும் பலவீனமாக இருக்கும் மற்றும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற மன உளைச்சல் காரணமாக நீங்கள் சிரமப்படுவீர்கள். உங்களின் சில முக்கியமான வேலைகள் தடைபடலாம். திருமணமானவர்கள் இல்லற வாழ்வில் துணையுடன் நெருங்கி வருவார்கள்.
காதலிப்பவர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பும் இன்று நீங்கி மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். இன்று திடீரென்று எங்காவது பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகும். இன்று

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கையில் எல்லாமே இயல்பாக இருக்கும். உங்கள் அன்றாட வழக்கப்படி அனைத்து வேலைகளையும் செய்வீர்கள். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும், இதன் காரணமாக கடின உழைப்பு இல்லாமல் கூட சில வேலைகளில் வெற்றியை காணிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
திருமணமானவர்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவும், உங்களுக்காக புதிதாக ஏதாவது செய்யவும் முயற்சிப்பார். காதலிப்பவர்கள் இன்றைய தினம் காதல் நிறைந்ததாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். நிதி விஷயங்களில் லாபம் உண்டாகும். பண விஷயத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக உங்களுக்கு கிடைக்காமல் இருந்த பணம் இன்று கைக்கு கிடைக்கும். தடைபட்ட வேலை மீண்டும் தொடங்கும். முழு நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கும்.
காதலிப்பவர்களுக்கு இன்றைய தினம் இனிமையாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்வில் சில பிரச்சனைகள் ஏற்படும். மனைவியுடன் அமர்ந்து மனம் விட்டு பேசுவது நல்லது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால், நீங்கள் வேலை செய்ய விரும்ப மாட்டீர்கள். இந்த நேரத்தில் குளிர்ச்சியிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் உங்கள் கவனக்குறைவால் இன்று சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வயிற்று வலி அல்லது வாயு பற்றிய பிரச்சனைகள் இருக்கலாம்.
உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள், தனிப்பட்ட வாழ்க்கையும் உங்களுக்கு திருப்தியைத் தரும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை இன்னும் அழகாக்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள். எந்த விஷயத்திற்கு செலவு செய்தாலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. இன்று சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதை தந்திரமாக சமாளிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் அன்பான உணர்வு இருக்கும். குடும்பத்தினருடன் வெளியே சென்று உணவு உண்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். டென்ஷனுக்கு மத்தியில், திருமண வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது உங்களுக்கு நன்மை பயக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையாக இருக்கும். உங்கள் குழந்தைகள் மீது இன்று அதிக அக்கறை காட்டுவீர்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு புதுமையை உணர்வீர்கள் மற்றும் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்வில் சில டென்ஷனை உணருவார்கள்.
வீடு குறித்த சில பிரச்சனைகள் ஏற்படலாம். காதலிப்பவர்கள் இன்று தங்கள் காதலியுடன் உல்லாசமாக இருப்பார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் பணி பாராட்டப்படும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் பணம் தொடர்பான விஷயங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்களுக்கு வெளியில் இருந்து வரவேண்டிய பணம் வந்து சேரும். வருமானத்தை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுகளை வழங்குவீர்கள்.
சில காரணங்களால் வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம் மற்றும் அவர்களின் ஆரோக்கியமும் மோசமடையக்கூடும். அதேசமயம் திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பார்கள். வேலை விஷயத்திலும் இந்த நாள் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், உங்கள் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான வெற்றியை அடைவதோடு விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். திருமணமானவர்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அடைவார்கள், மனைவியுடனான உறவு மேம்படும். புதிய வேலைகளை தொடங்க நல்ல நாள் இன்று.
காதலிப்பவர்கள் இன்று மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். இதன் காரணமாக உங்கள் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று வீட்டுக்கு பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். எதையும் சந்திக்க தயாரான மனநிலையில் இருக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று சற்று பலவீனமான உணர்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதும் மிகவும் முக்கியம். இன்று செலவுகள் அதிகரிப்பதால், உங்கள் டென்ஷனும் அதிகரிக்கும்.
வருமானம் இன்று சாதாரணமாக இருக்கும். காதல் வாழ்க்கை இன்று கடினமாக இருக்கும். உங்கள் காதலியுடன் இன்று வாக்குவாதம் ஏற்படலாம். இன்று வேலையின் அழுத்தமும் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும். சில காரணங்களால், நீங்கள் மனதளவில் மிகவும் கவலையடைவீர்கள். இதனால், உங்கள் ஆரோக்கியமும் கொஞ்சம் குறையும். இன்று உங்களின் செலவுகள் இரட்டிப்பாகும். ஆனால், அதை சமாளிக்கும் அளவுக்கு நல்ல வருமானமும் இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களுக்கு கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் மற்றும் நீங்கள் முன்னேற உதவுவார்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பார்கள். அதே சமயம் காதலிப்பவர்கள், தங்கள் காதலியிடம் திருமணத்தைப் பற்றி பேச நல்ல சமயம்.

Exit mobile version