ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 26, 2024, சோபகிருது வருடம் மாசி 14, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம், கும்ப ராசியில் உள்ள அவிட்ட சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் நற்பெயரும், மதிப்பும் அதிகரிக்கும். நீங்கள் கருணை உள்ளத்துடன் செயல்படுவீர்கள். சிலருக்கு வேலையில் மன அழுத்தம் சந்திக்க நேரிடும். அரசு வேலையில் பதவி, கௌரவம் கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் நேரத்தை வீணடிக்காமல், கண்ணும் கருத்துமாக உங்கள் வேலைகளை செய்து முடிக்கவும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். உங்களின் வேலையில் முன்னேற்றத்திற்கான திட்டங்களில் மும்முரமாகச் செயல்படுவோம். மாணவர்கள் கல்வியில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் ஆசிரியர்களின் உதவியுடன் சேரும். நண்பர்களுடன் வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது இருக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். அனைவருக்கும் மேலதிகாரிகளுடன் எந்த ஒரு பிரச்சனையிலும் ஈடுபட வேண்டாம். அனுபவம் வாய்ந்தவர்களின் நல்ல ஆலோசனையை பெற்றுக் கொள்ளவும். சிலர் பணிச்சுமையால் சிரமப்பட வேண்டியது இருக்கும். உங்கள் இயல்பில் எரிச்சல் தன்மை இருக்கும். வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்புக்கு தகுந்த பலனை பெறுவீர்கள். நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட சாதகமான நாள். சகோதரர், சகோதரிகளின் உதவியாள் அனைத்து வேலைகளும் எளிதாக முடிவடையும். சில வேலைகள் முடிப்பதில் உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கடினமான சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்கலாம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலமையான பலன்களை கிடைக்கும் நாள். தேர்வு, விளையாட்டு போட்டிகளில் ஈடுபடக்கூடிய மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். பெற்றோரின் ஆசியுடன் எந்த ஒரு சிக்கலையும் தீர்க்க முடியும். எந்த ஒரு வேலையும் திட்டமிட்டு செயல்படவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். முதலீடு செய்வதில் மிக கவனம் தேவை.. இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். புதிய சொத்து வாங்குவதற்கான ஆசை நிறைவேறும். நீண்ட காலமாக முயற்சித்து வரக்கூடிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலையில் சுமை அதிகமாக இருக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தாயின் உடல்நிலையில் விழிப்புடன் இருக்கவும். சிலருக்கு நாள்பட்ட நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். வணிகத் திட்டங்களில் முழு கவனத்துடன் செயல்பட, நல்ல லாபத்தை பெற்றிடலாம். இன்று உங்களின் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனை, மனவிரிசல் ஏற்படும்.உங்கள் பேச்சில் இனிமையும், கட்டுப்பாடும் அவசியம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை, வியாபாரம் என தொடர்ந்து லாபகரமான வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டத்தை நம்பி முயற்சி செய்யாமல் விட வேண்டாம்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களுடன் தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் ஆலோசனை பெறவும். அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். கோபத்தால் மனவருத்தம் அதிகரிக்கும். என்று உங்களின் குடும்ப உறுப்பினர்களாக மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பணிகளை குறித்து நேரத்தில் செய்து முடிக்க முயற்சிக்கவும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கூட்டணியுடன் செய்யக்கூடிய வேலைகள் சிக்கலை தருவதாக இருக்கும். கவனமாக கையாளவும். வீடு, மனை அல்லது வாகனம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் வரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் நீங்கும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். முன்னோர்களின் சொத்து மூலம் லாபமடைவீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சிறப்பான மன உணர்வு இருக்கும். கடந்த கால தவறுகளில் இருந்து கற்ற பாடம் பயனுள்ளதாக இருக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் தரக்கூடிய நாள். உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தை சந்திப்பீர்கள் .

Exit mobile version