ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 12.02.2024 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 12.02.2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் பிப்ரவரி 12, 2024, சோபகிருது வருடம் தை 29, திங்கட் கிழமை, சந்திரன் கும்பம், மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மற்றவர்களிடம் சிக்கிய பணத்தை திரும்ப கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். சில வேலைகளுக்காக திடீரென பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். என்று உங்கள் வாழ்க்கையில் சோகமான மனநிலையில் இருப்பீர்கள். புத்திசாலித்தனமாக முடிவு எடுத்து செயல்பட உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்த உடல்நிலை மேம்படும். உடல் நிலை சீராகும். உங்களின் வேலைகளில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உறுதுணை கிடைக்கும். இன்று எதிர்மறை சிந்தனைகளில் இருந்து விலகி இருக்கவும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்தி, பெரியோர்களின் ஆலோசனையை பின்பற்ற நற்பலன்களை பெற்றிடலாம். இன்று குடும்பத்தினரின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்துடன் சுற்றுலா, பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.. இன்று நீங்கள் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உங்களின் சிக்கலான வேலைகளை முடிப்பதில் குடும்பத்தினரின் மூல ஆதரவை பெறுவீர்கள். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு விலகி நெருக்கம் அதிகரிக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கொஞ்சம் கடினமான நாளாக இருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெற அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களின் கடின உழைப்பு போட வேண்டியது இருக்கும். காதல் உறவில் மிக கவனமாக இருக்கவும். உங்கள் குடும்பம் மற்றும் பண பிரச்சனையை தீர்ப்பதில் நண்பர்களின் உதவி கிடைக்கும். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயலவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவு பலனைத் தரும். குடும்பம் தொடர்பான விஷயங்களில் சில மனக்கசப்புகள் வந்து செல்லும். உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிட விரும்புவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். நிதிநிலை சாதாரணமானதாக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பிஸியாக செயல்படுவீர்கள். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க, நேரத்தை வீணடிக்காமல் திட்டமிட்டு செயல்படவும். உங்கள் காதல் விஷயத்தில் புரிதலும், அன்பை வெளிப்படுத்தக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். சிலரின் உதவிகள் உங்கள் வேலை முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப வாழ்க்கையில் அன்பையும், மகிழ்ச்சியையும் உணர்வீர்கள். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி மன நிம்மதி அடைவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீண்டகால விருப்பங்கள் நிறைவேறும். வேலையை விரைந்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் நாம் ஆர்வம் செலுத்துவீர்கள். நிதி நெருக்கடிகளை சமாளிக்க உங்கள் துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் காதலை வெளிப்படுத்த சாதக சூழல் நிலவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் விருந்து அல்லது விழாக்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நெருங்கிய நண்பர் அல்லது முக்கிய நபர் ஒருவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அவரின் ஆலோசனை, வழிகாட்டுதல் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். உங்கள் பணிகளில் அதிக ஆர்வத்தை காட்டுவீர்கள். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க திட்டமிட்டு செயல்படவும். இன்று யாருடனும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்தவும். மன ஆரோக்கியத்தை பேண பொழுதுபோக்கு விஷயத்தில் ஈடுபடுவீர்கள். முக்கிய வேலைகளை முடிப்பதில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். என்று உங்கள் உறவினர் அல்லது நண்பர்களே சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணைக்கு அற்புதமான பரிசை வாங்கி தர முயற்சிப்பீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குடும்ப உறவுகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அன்றாட பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பணத்தை சம்பாதிப்பதில் புதிய யுத்தியை யோசிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். கூட்டு தொழில் செய்யக்கூடியவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கடைப்பிடிக்கவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்கள் மனைவியுடன் ஆனால் கருத்து வேறுபாடு, கோபம் ஆகியவை விலகும். வாழ்க்கைத் துணையின் மீது அக்கறை உண்டாகும். இன்று பணத்தை முதலீடு வழியை யோசிப்பீர்கள். குழந்தையின் ஆரோக்கியம் குறித்து கொஞ்சம் கவலை ஏற்படும்.