ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 29.12.2023 – Today Rasi Palan

Published

on

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் இன்றைய ராசி பலன் – Aries

உடல் நலம் சீராக இருந்துவரும். தூக்கத்தில் நல்ல கனவுகள் வரும். பெண்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாகவே இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். அந்நியோன்னியம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்கள்.
அவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சொந்த தொழில் முயற்சிகள் சற்று காலதாமதமாகும். சுயதொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக வாய்ப்பு உண்டு.

ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெளியூர் பயணத்தால் ஆதாயம் அடைவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. மாணவர்களின் கல்வி பளிச்சிடும்.
எதிர்பார்த்த பணம் வரும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகளை ஏற்றுவது சற்று காலதாமதம் ஆகும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. குறிப்பாக சளி சம்பந்தப்பட்ட தொல்லைகள் ஏற்படலாம்.

மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். சற்று அலைச்சல்கள் இருந்தாலும் காரிய வெற்றி உண்டாகும். வாகன வகை தகவல் தொழில்நுட்பத் துறை மீடியா துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்.
குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக செல்லும். சுபகாரியங்களை பற்றிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வருவது சற்று காலதாமதம் ஆகும்.

கடகம் இன்றைய ராசி பலன் – Cancer

நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு மிகச்சிறந்த நாளாகவே இருக்கும்.நீங்கள் எடுக்கின்ற புது முயற்சிகள் வெற்றியடையும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை அல்லது நீங்கள் விருந்தினராக செல்வது போன்ற இனிய நிகழ்வுகள் உண்டு.
நீண்ட நாள் தாமதப்படுத்த பட்ட பல காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவி உறவு சீராக இருந்துவரும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.

சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo

இன்று நேர்மறையான எண்ணத்தைக் கடைப்பிடித்தால், தங்கள் வேலையில் வெற்றியைப் பெற முடியும். இன்று நேரம் சாதகமானதாக இருக்கும். அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அன்பானவர்களின் உதவியுடன் எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். மேலும் அவற்றைச் செயல்படுத்துவீர்கள்.
பரம்பரை சொத்து தொடர்பான ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் தீரும். சகோதரர்களுடனான உறவு நீடிக்க நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கசப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவது உறவுகளை மோசமாக பாதிக்கும். பிள்ளைகளின் உதவியால் பிரச்னை தீரும்.

கன்னி இன்றைய ராசி பலன் – Virgo

வங்கி தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் விநாயகர் வழிபாடு விக்கினத்தை தீர்க்கும்.

துலாம் இன்றைய ராசி பலன் – Libra

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், பணியில் அதிக அளவில் ஈடுபடுவார்கள். இன்று நீங்கள் அரசியல் தொடர்புகளால் நல்ல பலனைப் பெறுவீர்கள், இது தடைப்பட்ட பணிகளை முடிக்க உதவும். சொத்து அல்லது புதிய வாகனம் வாங்க திட்டமிடலாம். இன்று உங்களின் நிதி சிக்கல் தீரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். நண்பர்களுடன் நேரத்தை வீணாக்காதீர்கள். வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நன்மை தரும்.

விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio

நண்பர்களுக்கு சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கிடைக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மிகுந்த முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்காக உத்தரவுகள் மற்றும் விசா போன்றவற்றிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டு.

புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை தொடர்பான தகவல்கள் சற்று காலதாமதம் ஆகும். இருப்பினும் நாளை நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உடைய நல்ல நாளாக இன்றைய நாள் அமையும்.

தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius

இன்று காலை முதலே பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வித்தியாசமாக ஏதாவது செய்து முயன்றால், அது மன மற்றும் உடல் சோர்வை நீக்கும். யாரையும் நம்புவதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது உங்கள் பணிக்கு தீங்கு விளைவிக்கும். கூட்டுத் தொழில், வணிகம் செய்பவர்கள், உங்கள் வேலையில் வெளிப்படைத்தன்மையை வைத்திருங்கள். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், ஒருவரின் ஆலோசனையும் நன்மை தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn

குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேம்படும்.கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக மாறும் சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய பேச்சு வார்த்தைகளும் நிகழ்வுகளும் மனதிற்கு சந்தோஷம் தருவதாக அமையும்.
பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வரவு செலவு நன்றாக இருக்கும் மாணவர்கள் கல்வியில் பளிச்சிடுவர்.

கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius

மாணவர்களின் கல்வி மேம்படும். உடல் நலம் சீராக இருந்துவரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரயாணங்கள் தொடர்பான திட்டமிடுதல் இருக்கும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும். தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிக்கை துறை பத்திரப்பதிவு கணக்குத் துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக செல்லும்.

மீனம் இன்றைய ராசி பலன் – Pisces

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கிறது. தனவரவை அதிகப்படுத்தும் செய்யும் தொழிலில் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகத்தை பொருத்தவரை பில்டிங் புரமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் அயர்ன் அண்ட் ஸ்டீல் போன்றவற்றில் முதலீடுகளை குறைத்துக் கொள்வது, வங்கித்தொழில் மருத்துவத்துறை போன்றவற்றில் முதலீடுகளை அதிகப்படுத்துவதும் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

Exit mobile version