Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01.12.2023 – Today Rasi Palan

Published

on

tamilni scaled

இன்றைய ராசி பலன் 01.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் டிசம்பர் 01, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 14 வெள்ளி கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக, தனுசு ராசியில் உள்ள கேட்டை, மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது எளிதாக கிடைக்கும். பெற்றோருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தினர் ஒருவரின் திருமணத்தில் இருக்கும் தடைகள் மூத்த நபர்களின் உதவியுடன் தீரும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலைகள் சிறப்பாக முடியும். முக்கிய வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் செல்வத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மேலும் உங்கள் தொழிலில் முன்னேற்றம், லாபத்தை அதிகரிக்க உங்கள் மனதில் தோன்றும் யோசனை உடனடியாக செயல்படுத்தலாம். இன்று சமூக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்தவும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் இனிமையான பலனைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகள் நினைத்து மகிழ்ச்சி உண்டாகும்.வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள். இன்று நீங்கள் உங்கள் ஆடம்பரத்திற்காக கொஞ்சம் பணம் அதிகமாக செலவழிப்பீர்கள். இன்று உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உங்கள் எதிரிகள் பொறாமைப்படுவார்கள். இன்று பணிபுரிபவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற சில தகவல்களைக் கேட்பார்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பெற்றோரின் ஆதரவோடும் ஆசியோடும் சில சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இன்று நீங்கள் ஒரு குடும்ப அங்கத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். பேச்சில் கவனம் தேவை.அதனால் உங்கள் மனம் கலங்கிவிடும். உங்கள் இனிமையான வார்த்தைகளால் எந்த சிக்கலையும் நீக்கி வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் மனம் குழப்பமாக இருக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில வேலைகளை செய்து முடிப்பதில் உற்சாகமாக இருப்பீர்கள், அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் எல்லா வேலைகளையும் தைரியமாக முடிக்க முடியும். இன்று மாலை உங்கள் துணையின் உடல்நிலையில் சற்று சரிவுகள் ஏற்படக்கூடும். உடல் நலம் தொடர்பான கவலைகள் ஏற்படும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனைவியுடன் ஏதேனும் தகராறு இருப்பின் அது தீரும். உங்கள் துணை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புகள் உண்டு. இன்று மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். இது உங்கள் மனதிற்கு அமைதியைத் தரும். இன்று காதல் வாழ்க்கையில் ஒரு புதிய ஆற்றல் பாயும். இன்று மாலையில் பிள்ளைகளின் பிரச்சனைகளைக் கேட்பீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனம் சற்று சோகமாகவும், கலக்கமாகவும் இருக்கும். அதனால் எந்த வேலையும் செய்ய உங்களுக்கு மனமில்லாமல் இருப்பீர்கள்.நீங்கள் வீட்டில் அல்லது வியாபாரத்தில் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்றாலும், நீங்கள் கவனம் செயல்பட வேண்டும். குடும்பத்திலும், பணியிடத்திலும் எந்த ஒரு சர்ச்சையிலும் இருந்து விலகி இருக்கவும். அப்படி செய்தால் எதிலும் நீங்கள் வெற்றி பெறலாம். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தங்கள் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். இன்று சமூகம் தொடர்பான தொண்டு பணிகளில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக செலவிடுவீர்கள். மாலையில் உங்களுக்கு வயிற்று வலி, சோர்வு, தலைவலி, காய்ச்சல் போன்ற சில பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமாக இருக்கவும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் துணையின் வீட்டின் மூலம் நீங்கள் மரியாதை பெறுகிறீர்கள். இன்று நீங்கள் சில செலவுகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவுகளை செய்ய வேண்டும். இன்று நீங்கள் வணிகத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்கள் நிலுவையில் உள்ள வேலையை முடிப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சகோதரர்களுடன் நீண்ட நாட்களாக ஏதேனும் தகராறு இருந்து வந்திருந்தால் அதுவும் இன்றுடன் முடிவுக்கு வரும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் உங்கள் அனைத்து பொறுப்புகளையும் பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். புதிய வேலைகளில், உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். இது உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். இன்று நீங்கள் உலக இன்பங்களை சிறப்பாக செய்து நன்மைகளை அனுபவிப்பீர்கள். இன்று மாலை சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சில விஷயங்களில் வெற்றி கிடைக்கலாம். அது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இன்று உங்கள் பிள்ளைகளிடமிருந்தும் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். இன்று சமூக மரியாதை பெறுவது உங்கள் மன உறுதியையும் அதிகரிக்கும். இன்று இரவை உங்கள் குடும்பத்தினருடன் சிரித்து கேலிக்கையாக கழிப்பீர்கள். உங்கள் சிறப்பான செயல்பாட்டால் உங்கள் வீட்டு பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்23 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 14 பிப்ரவரி 2025 இன்று காதலர் தினம் – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 14.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 2 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 13 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 1, வியாழக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 12 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.02.2025, குரோதி வருடம் தை மாதம் 30, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.02.2025, குரோதி வருடம் தை மாதம் 29, செவ்வாய்க் கிழமை,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.02.2025 குரோதி வருடம் தை மாதம் 28, திங்கட் கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.02.2025, குரோதி வருடம் தை மாதம் 27 ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 07 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.02. 2025, குரோதி வருடம் தை மாதம் 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் ரி ஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம்...