ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 03.11.2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 03.11.2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன் நவம்பர் 3, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 17 வெள்ளிக் கிழமை, சந்திரன் கடகத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்குச் சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எடுத்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். பல நாட்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய உங்களின் நண்பர்கள் மூலம் வேலை வாய்ப்புகளும், அவர்களின் ஆதரவும் கிடைக்கும். அரசு அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்த சண்டை, சச்சரவு நீங்கி நல்ல சூழல் நிலவும். இன்று மனதிற்கு நிறைவான நாளாக அமைகிறது. முருகப்பெருமானை வழிபாடு செய்யவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் எண்ணங்கள் நிறைவேறக் கூடியதாக இருக்கும். புதிய வியாபாரம் முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும். காலையில் நல்ல செய்திகள் வந்து சேரும். ரிஷப ராசி நேயர்களுக்கு பங்கு சந்தை முதலீடு லாபம் தரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதி தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளும் பாரமும் தீரும். பிள்ளைகள் வகையில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு திருமண யோகங்கள் கை கூடும். சஷ்டி திதியான இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் தீரக் கூடியதாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றியும், பல நாட்களுக்குப் பிறகு உங்களின் சிந்தனையில் நல்ல தெளிவு ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைகிறது. மனபாரங்கள் குறைய கூடிய நாளாக இருக்கும். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று காரியத்தில் வெற்றி கிடைக்கும். போராட்டங்கள் இருந்தாலும் அதை தீர்க்கக்கூடிய நாளாக இருக்கும். கடன் பிரச்சினைகள், ஆரோக்கிய பிரச்சனை என சிறு சிறு மனப்போராட்டங்கள் இருக்கும். குடும்பத்தில் மனக்கசப்புகள் இருக்கக்கூடியதாக நாளாக இருக்கும். இன்று பல நாட்களுக்குப் பிறகு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளால் வெற்றிகள் உண்டாகும். வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்ய பிரச்சனைகள் குறையும்..
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வியாபாரம் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். காலை வேலையில் நற்செய்திகள் தேடி வரும். வேலை தொடர்பாக பயணங்கள் நல்ல வெற்றியைத் தரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். விநாயகருக்கு தேங்காய் மாலை சாற்ற மனக்கவலை தீரும். வியாபாரம் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும், தொழிலாளர்களுடனான பிரச்சனைகளும் தீர்ந்து சாதகமான தீர்வு கிடைக்கும்.தேய்பிறை சஷ்டி திதியில் முருகப்பெருமானை வணங்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக இருந்தால் எந்த செயலை செய்தாலும் அதில் கூடுதல் கவனம் தேவை. சரியான திட்டமிட்டு செயல்பட செயல்களில் வெற்றி கிடைக்கும். எதிராளிகளால் உங்களுக்கு தடைகளும், சில பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்குகள் விசாரணைகளில் இன்று கவனமாக இருப்பது நல்லது. பைரவரை வணங்குவது நன்மை தரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சிறு சிறு பிரச்சனைகள் வந்து செல்லும். இருப்பினும் உங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. இன்று மனதளவின் இருக்கும் சஞ்சலம் தீரும். இன்று சந்திரனின் சஞ்சாரம் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் இனிமையான அனுபவத்தைத் தரும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மனதளவில் இருக்கும் பாரங்கள் தீரக்கூடியதாக இருக்கும். குடும்ப சச்சரவுகள் தீரக்கூடிய நாள். இன்று உங்களுக்கு காலைவேளையில் நல்ல செய்திகள் தேடிவரும். உடல் ஆரோக்கியம் மேன்மை பெறும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கிடைக்கக்கூடிய நாள். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. பல நாட்களாக இருந்த வந்த குடும்ப சண்டைகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. வண்டி, வாகனம் வாங்குவது, விற்பது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.கொடுக்க வேண்டிய கடன், உங்களுக்கு வர வேண்டிய பாக்கி தொடர்பான பிரச்னைகள் தீரக்கூடிய சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு நிம்மதி தரும். வங்கி சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பங்கு சந்தை முதலீடு லாபத்தை தரும்.