Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 19,09.2023 – Today Rasi Palan

Published

on

tamilni 209 scaled

இன்றைய ராசி பலன் 19,09.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 2 செவ்வாய்க் கிழமை. சந்திரன் துலாம் ராசியில் உள்ள சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சதுர்த்தி, பஞ்சமி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். மீனம் மேஷ ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம்
இன்று உங்கள் நேரம் சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி அலட்சியமாக இருக்காதீர்கள். தொழிலதிபர்கள் உங்கள் வியாபாரத்தில் சில புதிய மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வியாபாரத்தில் நீங்கள் செய்யக்கூடிய மாற்றங்களால், அது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் மனைவியுடன் எதிர்கால திட்டங்களை பற்றி விவாதிப்பதில் மாலை நேரத்தை செலவிடுவீர்கள்.

ரிஷபம்
இன்று நீங்கள் ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், அதனால் கொஞ்சம் கவலையாக இருப்பீர்கள். இன்று உங்கள் மனதை அமைதியாக, நிதானமாக வைத்து செயல்படவும். உங்கள் வேலையில் ஒரு பணியாளரால் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் அதிகாரிகளுடன் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். நிதானம் தேவை.

மிதுனம்

இன்று உங்கள் தொழிலில் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், உங்கள் பணத்தை புதிய வேலைகளில் முதலீடு செய்வீர்கள். இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளையின் கல்வி தொடர்பான கவனமாக சிந்தித்து முடிவு எடுக்கவும்.

கடகம்
இன்று உங்களின் பொருள் வசதிகள் பெருகும். இன்று நீங்கள் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வியாபாரத்தில் விவேகத்துடனும் எடுக்கும் முடிவுகளால் ஆதாயம் அடைவீர்கள். இன்று ஆடம்பரத்திற்காக பணத்தை வீணடிக்க வேண்டாம்,

சிம்மம்

இன்று உங்களுக்கு சில மதிப்புமிக்க பொருட்கள் வாங்க அல்லது கிடைக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும். நீண்ட நாட்களாகச் சந்திக்கக் காத்திருந்த பழைய நண்பரை இன்று சந்திப்பீர்கள். நீங்கள் ஏழைகளுக்கு உதவுதல் மூலமும், உங்கள் திறமையினாலும் மற்றவர்களை உங்களிடம் ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் இன்று கல்வியில் சில தடைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி
இன்று உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்கள் புகழை அதிகரிக்கும். இன்று நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அது மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் இன்று தங்களுக்கு விருப்பமான வேலையைச் செய்யலாம். அது அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இன்று உங்கள் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

துலாம்
உங்கள் உடல்நலனில் கவனம் தேவை. உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற்று தீர்வு காணவும். இன்று நீங்கள் குடும்பத்தில் இருந்து சில நல்ல தகவல்களைப் பெறலாம். உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வேலை வாய்ப்பில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களின் தைரியம் பணியிடத்தில் பாராட்டப்படும். கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.

விருச்சிகம்
உங்கள் குடும்பத்திற்காக வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்ற முடியும். இதனால் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள சிறு குழந்தைகளுடன் உல்லாசமாக கழிப்பீர்கள். உங்களின் பணம் மற்றவர்களிடம் சிக்க வாய்ப்புள்ளது. கவனம் தேவை. கூடுதல் வருமானத்திற்காக திட்டம் தீட்டுபவர்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும்.

தனுசு
இன்று வியாபாரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக லாபகரமான ஒப்பந்தம் கிடைக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அதை இன்று திரும்பப் பெறலாம், இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். இன்று உங்கள் மாமியார் குடும்பத்துடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதில் உங்கள் பேச்சின் இனிமையை பராமரிப்பது நல்லது. உறவில் விரிசல் ஏற்படலாம். மாலை நேரத்தை நண்பர்களுடன் உல்லாசமாகக் கழிப்பீர்கள்.

மகரம்
இன்று வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். இன்று ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வேலைகள் செய்பவர்களுக்கு சாதகமான நாள். வீட்டில் பிரச்சனை இன்றே தீரலாம். கவலைப்பட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் கவலைகள் தீரும். பங்கு சந்தை முதலீடுகள் இன்று உங்களுக்கு லாபத்தைத் தரும்.

கும்பம்
இன்று உங்கள் எதிர்காலத்திற்கான புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பணியிடத்தில் மூத்தவர்களில் உதவியுடன் உங்கள் வேலையில் பதவி உயர்வு பெறலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம். இன்று சிறு வணிகர்கள் பணப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இன்று உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மீனம்
இன்று உங்கள் மனம் கொஞ்சம் கலக்கமாகவும், அலைச்சல் நிறைந்ததாகவும் இருக்கும். இன்று யாருடைய செல்வாக்கிலும் முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். இதனால், எதிர்காலத்தில் பெரும் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம். காதல் துணையை தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்னும் அறிமுகப்படுத்த ஒரு சிறந்த நாளாக இருக்கும். மாமியார் மூலம் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்21 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.12.2024 குரோதி வருடம் கார்த்திகை 24, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை,...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...