ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 17.09.2023 – Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 17.09.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17, 2023, சோபகிருது வருடம் ஆவணி 31 ஞாயிறு கிழமை. சந்திரன் கன்னி ராசியில் உள்ள அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். பிரதமை திதி நடக்கக்கூடிய இன்று மரண யோகம் உள்ள நாள். கும்ப ராசிக்கு பூரட்டாதி, உத்திரட்டாதி சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டிலும், பணியிடத்திலும் உங்களின் கோபத்தை கட்டுப்படுத்திச் செயல்பட வேண்டிய நாள். கோபத்தால் பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடும். என்று உங்களின் வருமானத்திற்கும், செலவிற்கும் இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் வருமானம் பெற பகுதிநேர வேலை தொடர்பாக சிந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தொழில் தொடர்பாக சில திட்டங்களை செயல்படுத்த, அதில் அபரமிதமான லாபம் பெறலாம். பணியிடத்தில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் உடல்நிலை தொடர்பான பின்னடைவு ஏற்படலாம். என்று உங்களின் வியாபாரத்தில் திடீர் லாபங்களும், பணவரவும் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தொழில் ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. உங்களின் திட்டமிட்ட செயல்பாட்டால் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களால் ஏமாற்றப்படலாம். உங்களின் மனதில் தோன்றக்கூடிய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ,உங்கள் மனைவியுடன் நெருக்கமும், இணக்கமான சூழலும் நிலவும். நண்பர்களின் ஆதரவுடன் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வேலைகள் முடிக்க முடியும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சில நல்ல விஷயங்களை குடும்ப உறுப்பினர்கள் மூலம் கேட்க முடியும். இன்று உங்களின் குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் அதை எளிதில் முடிக்க முடியுமா. காதல் வாழ்க்கையில் துணையுடன் நேர்மையாக இருக்கவும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். குடும்பத்தில் பெண் உறுப்பினர்களின் மூலம் நிதிநிலை மேம்படும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். என்று எது தொடர்பாகவும் குழப்பங்களை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். இன்று எந்த ஒரு ஆபத்தான முயற்சிகளையும் எடுக்க வேண்டாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து உறவு மேம்படும். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள், ஆதாயங்களை பெறுவீர்கள். பெற்றோருடன் உறவு மேம்படும். பணியிடத்திலும், வேலையிலும் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகக் கூடிய நாள். உங்களின் ஆணவத்தால் அதிக பணம் செலவழிக்க நேரிடும். அதனால் எளிமையாக நடந்து கொள்ளவும். இறுமாப்பு வேண்டாம். என்று உங்களின் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சொத்து தகராறு போன்ற விஷயங்களில் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும். மாணவர்களின் உயர்கல்வியில் சாதகமான சூழல் இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை குறைவு காரணமாக அன்றாட பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்படும். அதனால் உங்களின் வேலைகளை சரியான வகையில் திட்டமிட்டு செய்யவும். வாழ்க்கை துணை ஆலோசனையால் உங்களின் நிதிநிலை மேம்படும். இன்று தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் நல்லுறவு பெறுவீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடன்பிறப்புகள் மூலம் நல்ல ஆதரவையும், அதனால் நன்மைகளையும் பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகள், மூத்த அதிகாரிகள் மூலம் உதவி கிடைக்கும். சொத்து வாங்குதல் விற்பது தொடர்பான விஷயங்களில் ஆவணங்களை முறையாக சோதிக்கவும். படித்துப் பார்க்கவும். பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம். என்று நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை நீங்கி மன மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சக ஊழியர்களுடன் சேர்ந்து சிறப்பாக செயல்பட முடியும். வேலைகளை எளிதாக முடிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் நினைத்த வெற்றியை பெற முடியும். சொத்து சம்பந்தமான விஷயங்களை சாதக முடிவுகள் பெற முடியும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ள பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் உள்ள பிரச்சனைகளை ஆசிரியரின் உதவி மூலம் தீர்க்க முடியும். நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் எந்த சில வேலைகளை முடிக்க முடியும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் இன்ப பயணம் செல்ல வாய்ப்புள்ளது. சகோதர, சகோதரிகள் வகையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக உண்டாகும். பிள்ளைகள் மூலம் விரும்பத்தகாத சில செய்திகள். கிடைக்கும். இது உங்களுக்கு மன வருத்தத்தைத் தரும். வீட்டில் திருமணம் தொடர்பான நல்ல விஷயம் விவாதிப்பீர்கள்.

Exit mobile version