ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 09.09.2023 – Today Rasi Palan

Published

on

இன்றைய ராசி பலன் 09.09.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2023, சோபகிருது வருடம் ஆவணி 23 வெள்ளி கிழமை. சந்திரன் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். தசமி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். விருச்சிக ராசிக்கு அனுஷம், கேட்டை சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு வர வேண்டிய பண பலன்கள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் தீரும்.

ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மன திருப்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. திருமண வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று அது தொடர்பான சுப செலவுகள் காத்திருக்கிறது.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய வியாபார தொடக்கம் வெற்றியைத் தரும். மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று காலை வேளையில் நல்ல செய்திகள் வந்து சேரும்.
​ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராகு கிரகத்தால் அக்டோபர் முதல் உங்கள் வாழ்க்கை மாறும்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இன்று விநாயகர் வழிபாடு இந்த நாளை தொடங்க, வரக்கூடிய பிரச்னைகள், குழப்பங்களை சமாளிக்க முடியும். குழந்தைகளால் மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவதும், நல்லெண்ணெய் வாங்கி தருவதும் நல்லது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகம் மிகுந்த நளாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய நிலையும், அலைச்சலும் உண்டாகும். இன்று உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர வாய்ப்புகள் உண்டாகும். பிரிந்த நண்பர்கள் புரிந்து கொண்டு சேர்வர். இது மன ஆறுதல் தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சங்கடங்கள் தீரும். பல நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள், தடைப்பட்ட வேலைகள் சிறப்பாகச் செய்து முடிக்கலாம். சொத்து தகராறு, சிறு குடும்ப பிர்ச்னை பிரச்னைகளை தீர்க்க முடியும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். ஆபத்து ஏற்படலாம். பண விவகாரங்களில் சற்று மன திருப்தி அற்றதாக இருக்கும். புதிய வியாபாரம், தொழில் தொடங்க வேண்டாம். வியாபார விஷயத்தில் கொடுக்கல், வாங்கலைச் சற்று ஒத்திப் போடுவது நல்லது.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று முருகப்பெருமான் ஆலயத்தில் அபிஷேகம் செய்வது நல்லது. அனுஷம், கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்குச் சந்திராஷ்டமம் இருக்கக்கூடிய நாள் என்பதால் விருச்சிக ராசியினர் நாள் முழுவதும் கூடுதல் கவனத்துடன் இருபப்து நல்லது. குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அதனால் இன்றைய நாளில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குடும்பத்தில் சச்சரவும், சண்டைகள் என மன வருத்தங்கள் தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களின் பேச்சு, செயல்களில் நிதானம் இருப்பது அவசியம்.
இன்று விநாயகர் ஆலயத்தில் வெல்லம் தானம் செய்யவும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதி இருக்கும். இன்று குடும்பத்தை விட்டு பிரிந்த நபர்கள், திரும்பி வருவது மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். கடன் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். கடன் கொடுப்பது, வாங்குவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி, வாகனம் மாற்றுவது, வாங்குவது போன்ற விஷயங்களில் முடிவெடுக்கலாம். இது குறித்து நண்பர்களின் ஆலோசனை, உதவி மனதிற்கு ஆறுதலைத் தரும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். இன்றைய நாளில் நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவதற்கான நாளாக இருக்கும். இன்று கணபதி வழிபாடு செய்வது நல்லது.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு ஆறுதல், திருப்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமையும். இன்று உங்களுக்கு சகோதர, சகோதரிகளுக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இன்று உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் நல்லாதரவு கிடைக்கும் என்பதால் மனம் மகிழ்ச்சி அடையும்.t

Exit mobile version