ஜோதிடம்

Tamil Rasi Palan Today : இன்றைய ராசி பலன் 06.09.2023

Published

on

Tamil Rasi Palan Today : இன்றைய ராசி பலன் 06.09.2023

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06, 2023, சோபகிருது வருடம் ஆவணி 20 புதன் கிழமை. சந்திரன் ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சப்தமி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம்
உங்களின் நற்செயல்களால் குடும்பம் முழுவதும் பெருமையும், மகிழ்ச்சியும் பெருகும். குடும்ப உறுப்பினர்கள் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சில வேலைகளை மேலும் தள்ளிப்போட நினைப்பீர்கள். வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க முயலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
​மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 : முயற்சிகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும்

ரிஷபம்
ரிஷபம்
உங்கள் வீடு, பணிச்சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளைகள் செயல்பாட்டால் மகிழ்ச்சியும், அவர்கள் விஷயத்தில் கவனமும் செலுத்துவீர்கள். பெற்றோரின் ஆசி கிடைக்கும். வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் உங்களின் உறவினர்கள் உதவி கிடைக்கும். பொருள் வசதிகளும் அதிகரிக்கும்.
​​ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024 – தொழில், வேலை முன்னேற்றம் கிடைக்கும்​

மிதுனம்

இன்று கூடுதல் கவனமாக செயல்பட வேண்டிய நாள். சாதகமான நேரம் இல்லை. உத்தியோகஸ்தர்கள் வேலைகளை முடிப்பதில் அக்கறை செலுத்தவும். இன்று மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் செய்ய வேண்டியது இருக்கும். பயணத்திற்கு முன் தேவையான விஷயங்களைச் சரிபார்க்கவும். குடும்ப உறுப்பினரின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் முடிவை எடுப்பதில் நன்மைகளை பெறுவீர்கள்.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். கண், உடல் சார்ந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் முடிவெடுக்கும் திறனின் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் மதிபு குறையும். உங்கள் பேச்சு, செயல்களைல் கவனம் தேவை. சொத்து வாங்கும் முயற்சிகளில் நன்மை உண்டாகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு இன்றைய நாள் தொழிலில் சில புதிய லாபகரமான மாற்றங்களைச் செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நண்பரின் உதவியால் அனுகூலத்தைப் பெறுவார்கள். சமூகப் பணிகளில் மரியாதை கூடும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

கன்னி
இன்று நீங்கள் குடும்பத்திற்காக ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள், குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை இன்று முழு மனதுடன் செய்து முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பால் மனம் மகிழ்ச்சியடையச் செய்யும். வாயு மற்றும் அஜீரண பிரச்சனையால் தொந்தரவு செய்யலாம்.

துலாம்
இன்று உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயம் கையில் எடுத்தாலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தை முடிக்க புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் முடிவு எடுக்கவும். இல்லையெனில் நீங்கள் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், தகுந்த நிதி ஆலோசகரின் ஆலோசனை தேவை. அல்லது சந்திராஷ்டமம் முடிந்த பின்னர் கவனித்து முடிவெடுக்கவும். உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
இன்று உங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். இன்று நீங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஏதாவது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். பிள்ளைகள் மீதான அன்பு அதிகரிக்கும். உங்கள் தைரியத்தாலும், வலிமையாலும் உங்கள் எதிரிகளை தோற்கடிக்க முடியும்.

தனுசு
நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் வேலைகள் செய்து முடிக்கலாம். மாணவர்கள் விரும்பிய படிப்பில் சேர்வதற்கான முயற்சியில் சாதகமான நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இன்று சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலையும் வலுவடையும். இன்று ஆன்மிகப் பணிகளுக்காக கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். இதன் காரணமாக உங்கள் புகழ் அதிகரிக்கும்

மகரம்
சில தேவையற்ற கவலைகள் இன்று உங்களைத் தொந்தரவு செய்யும். அது உங்கள் மன அழுத்தம் தருவதாக இருக்கும். இன்று நீங்கள் வேலையில் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்கள் வேலைகளைக் கெடுக்க முயல்வார்கள். அரசியலில் உள்ளவர்கள் தொண்டர்களின் ஆதரவு பெருகும். கடினமான சூழலில் உங்கள் வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்.

கும்பம்
இன்று உங்கள் மனம் உங்கள் தொழில், வியாபாரம் குறித்து கவலைப்படும். சூழல் சாதகமற்றதாக இருப்பதால் உங்களுக்கும் கோபம் வரும். இன்று பொறுமையுடன் உழைக்க வேண்டிய நாள். எந்த ஒரு வேலையையும் அவசரமாகச் செய்தால் அது தவறாகிப் போகலாம். அதனால் நிதானம் தேவை. திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் உங்கள் பொருள் வசதியை அதிகரிப்பீர்கள்.

மீனம்
இன்று உங்கள் உடல்நிலை குறித்து கவலை ஏற்படலாம். இன்று உடல் நல பிரச்னை தொந்தரவு செய்யலாம். இன்று உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் அதிகமாக பணம் செலவழிப்பீர்கள். அதனால் செலவுகளை கவனமாக செய்யவும். இல்லையேல் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இன்று மாலையில் பிள்ளைகளின் பிரச்சனைகளை தீர்க்க வாய்ப்பு கிடைக்கும்.

Exit mobile version