ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 05.09.2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 05.09.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 05, 2023, சோபகிருது வருடம் ஆவணி 19 செவ்வாய்க்கிழமை. சந்திரன் மேஷம் ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சஷ்டி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் ராகுவுடன் சேர்ந்து கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு உடல் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக கண், வயிறு தொடர்பான பாதிப்பு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகளை மாலைநேரத்தில் எடுப்பது நல்லது.
குடும்பச் செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும். பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் தடைகள் நீங்கும்.
இன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரனின் சஞ்சாரம் பல வெற்றிகளைக் கொடுக்கும். எதிரிகளால் ஏற்படும் பிரச்னைகள் தீர சத்ரு சம்ஹார ஹோமங்கள் செய்யலாம். இல்லையேல் கந்த சஷ்டி கவசம் பாடுவது நல்லது.
இன்று வியாபாரத் துறையில் இருந்து வந்த தடைகள் நீங்கும், புதிய லாப வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வணிகத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் சில புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அலுவலகத்தில் மறைமுக எதிரிகள் பிரச்னைகள் தீரும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிம்மதி தரக்கூடிய நாளாக இருக்கும். லாபத்தில் இருக்கும் குரு, ராகுவுடன் சந்திரன் சேர்ந்து சஞ்சரிப்பது வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தை தரும்.
சில பணிகள் முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படலாம். இன்று பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும்.
வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து வெளிவர முருகப் பெருமான் வழிபாடு செய்யவும். வேலை பூஜை, வேலுக்கு அபிஷேகம் செய்வது நல்லது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் குதூகலமான நாளாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சந்திரனின் அமைப்பால் மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், தாய் வழியிலும் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். சில சொத்துக்களை உடைமையாக்க முடியும்.
முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அரளி பூ சாற்றி வழிபாடு செய்வதும் நல்லது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு நண்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கிய முடிவுகள், வேலைகளை பிற்பகலுக்குப் பின் செய்வது நல்லது.
எந்த ஒரு காரியம் செய்வதாக இருந்தாலும், புதிய ஒப்பந்தம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பேச்சில் இனிமை தேவை. இல்லையெனில் அது உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நண்பகலுக்கு பின் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் மனக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ராசியில் இருக்கும் செவ்வாய், 8ல் இருக்கும் சந்திரன், ராகுவால் கணவன் – மனைவி இடையே சிறு பிரச்னைகள் கொடுக்க வாய்ப்புள்ளது. முருகனின் வழிபாடு நன்மை தரும்.
வேலை தேடுபவர்களுக்கு இன்று சில வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்,
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்தோசம் கிடைக்கும் நாள். பல ஆண்டுகளாக இருந்து வந்த மன பாரம் தீரும். திருமண தோஷங்கள் விலகும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும், பணிச்சுமை உங்களுக்கு மன உளைச்சலைத் தரக்கூடும் இன்று நீங்கள் நெருங்கிய நண்பருக்கு உதவ முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தை பாக்கியம் பெற சஷ்டி விரதம் இருக்கலாம். கடன் தொல்லை, மன வருத்தங்கள் தீரும் நாள்.
கூட்டுத் தொழில் செய்பவர்கள் இன்று அதில் சில தடைகளை சந்திக்க நேரிடும். பேச்சில் நிதானம் இருக்க வேண்டும். பிள்ளைகளின் திருமணத்தில் இருந்து வந்த தடை இன்று நீங்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்நோக்கும் சில சவால்களுக்கு முடிவு கட்டுவார்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப ஒற்றுமை கூடும். மனதில் பாரம் தீரும். குடும்ப பிரச்னைகள் தீருந்து ஒற்றுமை பிறக்கும். காலையில் நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று திடீரென்று வியாபாரத்தில் பெரும் தொகையைப் பெறலாம், இது உங்கள் செல்வத்தை அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும். உங்கள் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். மாணவர்களின் உயர்கல்விக்குச் சாதக நாள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும், துணையையும் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு நல்ல வரன் வந்து சேரும். உங்கள் செயல்பாடுகளுக்கு குடும்ப உறுப்பினர்களால் அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த உறுப்பினர்களின் உதவியைப் பெற்றுத் தீர்வு காணலாம். ஆன்மிக செயல்களில் மன நிம்மதி கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் சிறப்பான வெற்றியைத் தரும். உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை உங்களைத் தொந்தரவு செய்யும். பணத்தையும் முதலீடு செய்ய முயல்வீர்கள். முதலீடுகள் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சில சுப நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் தீவிரமாக பங்கேற்பீர்கள். இது நிச்சயமாக உங்களுக்கு நன்மை பயக்கும். காதல் வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் மனைவியுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். அதனால் இன்று கோபத்தைத் தவிர்ப்பதும், நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று புதிய வருமானம் கிடைக்கும்.