Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 04.09.2023 – Today Rasi Palan

Published

on

tamilni 31 scaled

​இன்றைய ராசி பலன் 04.09.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 04, 2023, சோபகிருது வருடம் ஆவணி 18 திங்கட் கிழமை. சந்திரன் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணியில் சஞ்சரிக்கிறார். பஞ்சமி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசியிலேயே சந்திரன் மற்றும் குரு இருப்பதால் மனதில் சிறு குழப்பங்கள் இருக்கும். இன்று குரு சந்திரன் சேர்ந்த நிலை சிறப்பாக இருந்தாலும், ராகு சந்திரன் சேர்க்கை சாதகம் இல்லாத நிலை இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். தாயுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
இன்று யோகா, தியானம் போன்றவற்றை செய்து மன அமைதியை தேடவும்.

ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சந்திரன், குரு, ராகு இருப்பதால் தூக்கமின்மை பிரச்னைகளும், செலவுகளும் இருக்கும்.இன்று பணியில் தாமதங்கள் ஏற்படலாம். முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற மனப்பதற்றம் இருக்கும். எந்த வேலையை எப்போது செய்து முடிப்பது என்ற குழப்பங்கள் இருக்கும். சரியான திட்டமிடங்களுடன் நாளை ஆரம்பிப்பது நல்லது.
சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக் காரியத்தில் வெற்றி கிடைக்கும். பல நாட்களாக குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். பணியிடத்தில் இருக்கக்கூடிய தொல்லைகள் குழப்பங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும்.

கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சந்திரன் பத்தாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் செயல்கள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.நீண்ட நாட்கள் ஆக இருந்து திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கிய எதிர்பார்ப்பு நல்ல செய்தி கிடைக்கும்.
இன்று உங்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். உடல்நிலையில் இடையூறு ஏற்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று விநாயகர் ஆலயத்தில் அர்ச்சனை செய்வது நல்லது எடுத்துக் காரியத்தில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினைகளும், கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகளும் தீரக்கூடிய நாள். மனதிற்கு நிறைவான நாளாக அமையும்.
குடும்பத் தொழிலில் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்: நீண்ட நாட்களாக நீங்கள் காத்திருந்த முக்கியமான வேலையை இன்று முடிப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக இருப்பதால் கவனமாக செயல்படவும். மேலும் சந்திரன் குரு மற்றும் ராகு உடன் சேர்ந்து இருப்பதால் எச்சரிக்கையாக செயல்படவும். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனமாக செயல்படவும். உங்கள் பேச்சிலும் செய்வதிலும் கூடுதல் கவனம் தேவை.

துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய வண்டி வாகனங்கள் வாங்குதல், விற்பது அல்லது மாற்றுவது தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனிதருக்கு நிறைவான நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு மனதிற்கு சந்தோஷத்தை தரக்கூடியதாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மன பலம் தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் ஆரோக்கியம் குறைபாடுகள் நீங்கும். மருத்துவ செலவுகள் குறைய கூடிய நாளாக அமையும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். புதிய திட்டங்கள் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும், படிப்பில் உள்ள குழப்பங்கள் நீங்கும்.

தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று காதலர்கள் அடியே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கக்கூடிய நண்பர்கள் மூலமாக சாதகமாக பலன்கள் கிடைக்கும். இன்றைய நாளில் வெற்றியும் முன்னேற்றத்தையும் அடைய விநாயகப் பெருமானே வழிபட்டு செயல்படுவோம்.

மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கால் முழுவதும் மன நிறைவை தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று அலைச்சல்கள் இருந்த போதிலும் மன நிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நபர்கள் ஒன்று சேரக்கூடிய நாளாக இருக்கும். இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ளவும்.

கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தீரும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். காரியத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
சமூக வட்டாரங்களில் உங்கள் புகழும் மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் வியாபாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை முடிக்க விரும்பினால், அவசரப்பட வேண்டாம்.

மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சந்தோஷம் கிடைக்கக்கூடிய. கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். இரண்டாம் இடத்தில் சந்திரன் குரு ராகுவின் சஞ்சாரம் சற்று மனக்குழப்பத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

இன்று வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.சில புதிய வேலைகளிலும் முயற்சி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் நிதி நிலையும் வலுவாக இருக்கும்.

Advertisement

ஜோதிடம்

tamilni 151 tamilni 151
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.12.2023 – Today Rasi Palan

இன்று டிசம்பர் 11ம் தேதி (கார்த்திகை 25) திங்கள் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இன்று மரண யோகம்...

rtjy 75 rtjy 75
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 10.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷ ராசியில் உள்ள ரேவதி,...

rtjy 62 rtjy 62
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 09.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 23 சனிக் கிழமை, சந்திரன்...

tamilni 109 tamilni 109
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 08, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 22 வெள்ளி கிழமை, சந்திரன்...

rtjy 35 rtjy 35
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilni 81 tamilni 81
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 06, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 20 புதன் கிழமை, சந்திரன்...

rtjy 32 rtjy 32
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 05, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 19 செவ்வாய்க் கிழமை, சந்திரன்...