ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 28 ஆகஸ்ட் 2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 28 ஆகஸ்ட் 2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 28, 2023, சோபகிருது வருடம் ஆவணி 11 திங்கட் கிழமை. சந்திரன் தனுசு ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ள நாள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று பத்தாம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவானால், வேலை தொழில் சார்ந்த விஷயங்களில் அலைச்சலை தருவார். மற்றபடி கிரக சூழல்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மிகவும் நல்ல நாளாகவே அமையும். கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உங்கள் முழு நாளையும் தொண்டு வேலைகளில் செலவிடுவீர்கள்.பணியிடத்தில் ஏற்படும் சில மாற்றங்களால், சக ஊழியர்களின் மனநிலை மோசமடையக்கூடும்,
ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று நிறைவான நாளாகும், தன லாபம் கிடைக்கக்கூடிய நாளாகவும் இருக்கும். பங்குச் சந்தை முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான நாள். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு இன்று நல்ல செய்திகள் காத்திருக்கிறது.
கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வியாபார விஷயத்தில் மேன்மை நிலை உண்டாகும்.உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள், மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இன்று மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைவதால், மிதுன ராசியினர் நாள் முழுவதும் எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கவனத்துடன் படிப்பதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது.
சொத்துக்களை பெறுவதற்கான உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமண முயற்சிகளீல் இன்று நல்ல வாய்ப்புகள் வரும். இன்று விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நன்மை தரும்.
கடக ராசி
கடக ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் வெற்றியை தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகள் கூட நீங்கி மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று சாதகமான நாளாக இருந்தாலும், குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்கள் பேச்சை கட்டுப்படுத்துவது அவசியம். தேவையற்ற வாக்குவாதம் மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடும்.
இன்று குடும்பச் சொத்துக்களைப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று நீங்கள் ஒரு முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்காதீர்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் திருப்திகரமான நாளாக இருக்கும். தன லாபத்தை தரக்கூடிய நாளாக இருக்கும். பங்கு சந்தை முதலீடுகள் பணத்தை பெருக்குவதாக அமையும். வியாபாரிகளுக்கு சாதகமான நாளாக இருக்கும். கலைஞர்களுக்கு மேன்மை தரக்கூடிய நாளாக இருக்கும்.
குழந்தையைப் பார்த்து மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இன்று வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
கன்னி ராசி
கன்னி ராசி நண்பர்களுக்கு இன்று ஆனந்தமான நாளாக அமையும். இன்று சிலருக்கு தொலைதூர பயணங்கள் செய்ய வேண்டிய நாளாகவும் இருக்கும். பயணங்கள் மிகவும் சாதகமாகவும், அனுகூலத்தை தரக்கூடியதாகவும் இருக்கும். இன்று கிரக தோஷங்கள் சேர்ந்து மனதிற்கு நிம்மதி ஏற்படும்..
விநாயகர் பெருமானை வழிபாடு செய்வதால் எடுத்துக் காரியங்களில் வெற்றி உண்டாகும்.
துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று பிரதோஷ வழிபாடு செய்வது நன்மை தரும். உங்களுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீர்வதோடு, மறைமுக எதிரிகளின் பிரச்சினைகளும் குறையும்.நீண்ட நாட்களாக அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து மனநிம்மதி ஏற்படும்.
வியாபாரம் செய்பவர்கள் இன்று புதிய வருமானத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வியாபார தகராறுகளை தவிர்க்க வேண்டும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி அவர்களுக்கு இன்று நாள் முழுவதும் எடுத்துக் காரியத்தில் நல்ல வெற்றிகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவி கைக்கு வந்து சேரும். வழக்கு விசாரணைகள் இன்று தீரக்கூடிய நாளாக இருக்கும். மனதிற்கு ரம்யமான நாளாக அமையும். வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்பவர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும்.உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று பிரதோஷ வழிபாடு செய்வதும், அன்னதானங்கள் மேற்கொள்வதும் நன்மையை தரும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கடன் தொல்லைகள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளும், பண விவகாரங்களில் இருந்து வந்த மனக்குழப்பங்களும் தீரும். நண்பர்கள், உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைப்பதால் மனதிற்கு நிம்மதியும், நம்பிக்கையும் உண்டாகும். சுக்கிரனின் அமைப்பால் கணவன், மனைவியிடையே மணக்கசப்பை ஏற்படுத்தக் கூடும்.
ஆகவே வள்ளி தெய்வானை உடன் கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்வது குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும்.
மகர ராசி
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பல மாதங்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும். நீங்கள் முன் எடுக்கக்கூடிய எந்த ஒரு விஷயங்களிலும் நல்ல லாபத்தை பார்க்க முடியும். இன்று வேலை தொடர்பான விஷயங்களில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்பக் கடமைகள் நிறைவேறும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும்.
இடமாற்றங்கள், புதிய வேலை முயற்சிகளில் சாதகமான சூழ்நிலை இருக்கும் என்பதால் மனிதர்க்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கணவன் மனைவியிடையே மன ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிறந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய சாதகமான நாளாக இருக்கும். விவாகரத்து, இரண்டாம் திருமணம் தொடர்பாக இழுபறியாக இருந்த விஷயங்கள் இன்று தீர்ந்து சாதகமாக அமையும். குழந்தைகள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு மன வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கும்.
இன்று நீங்கள் உங்கள் வணிகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க செல்வாக்கு மிக்க நபரின் ஆலோசனையைப் பெறலாம்.
இன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிக சிறப்பான பலனை தரும்.
மீன ராசி
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களால் உதவி கிடைக்கும். இன்று நாள் முழுவதும் உற்சாகமான நாளாக அமையும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் அனுகூலங்களும் உண்டாகும். இன்று கடன் உதவிகள் பெறுவது மனதிற்கு திருப்தியை தரும். வியாபாரம், தொழில் தொடர்பான விவகாரங்கள் சாதகமாக அமையும்.
உங்கள் தொழிலில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கவும்.