ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 27.08.2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 27.08.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27, 2023, சோபகிருது வருடம் ஆவணி 10 ஞாயிற்றுக்கிழமை. சந்திரன் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ள நாள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று நினைத்த காரியம் நிறைவேறும். மனதிற்கு இனிமையான நாளாக இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப காரியமும் நடக்கும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த செயல்கள் நடந்து முடிய வாய்ப்புள்ளது.
இன்று கிரக சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக இருப்பதால் அனைத்து விஷயங்களும் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும்.உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் தொடங்கிய வேலையில் வெற்றி கிடைக்கும்.
ஏகாதசி திதியான இன்று கருட பெருமானை வழிபடுவது நன்மை தரும்.
ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று மனதிற்கு ஆறுதலான நாளாக இருக்கும். இன்று நாளின் முற்பகுதியில் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் செயல்களில் கவனம் தேவை. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் மதியத்திற்கு பின்னர் எடுப்பது நல்லது. இன்று குடும்ப விஷயத்தில் மகிழ்ச்சி மேலோங்கும்.
இன்று உங்கள் தொழிலில் எந்த முடிவும் எடுத்தால் அது நிச்சயம் லாபத்தைத் தரும். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்கலாம்.
இன்று ஏகாதசி திதி என்பதால் பெருமாளை வணங்குவதும், பசு மாட்டுக்கு உணவளிப்பதும் நல்லது.
மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களின் எந்த ஒரு முக்கிய வேலைகளையும் கவனமாக செய்வது நல்லது. முடிந்தால் தள்ளி வைப்பது நல்லது.
பெண்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு உடல் மற்றும் மனதில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி தரும். உடலுறவு விதத்தில் முன்னேற்றத்தை காணலாம். இன்று தடைபட்ட வேலைகள் முடிந்து மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
கடக ராசி
கடக ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் மிகவும் உற்சாகமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மன வருத்தம், பிரச்சனைகள் தீர்ந்து, உறவு மேம்படும். நண்பர்கள், உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இன்று வீடு, வாகனம் வாங்க நினைத்தால் உங்கள் முயற்சி வெற்றியடையும். பிள்ளைகளின் பொறுப்பை நிறைவேற்ற முடியும்.பிள்ளைகளின் பொறுப்பை நிறைவேற்ற முடியும்.
இன்று ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்வது மிகவும்.
சிம்ம ராசி
நேயர்களுக்கு இன்று ராசிநாதன் சூரியன் சிம்ம ராசியிலேயே இருப்பதும் சந்திரனின் அமைப்பும் உங்களுக்கு பலவிதத்தில் சாதகமான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அல்லது அது தொடர்பாக நீங்கள் முக்கிய நபர்களை சந்திக்கக்கூடிய நிகழ்வு மனதிற்கு நிறைவை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.
கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும். கடன் தொல்லை, நிதி சிக்கல் உள்ளிட்ட பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். குடும்ப பாரங்கள் குறைய கூடிய நாளாகவும் மனதிற்கு இதமான நாளாகவும் இருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரக்கூடிய சூழல் இருக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பிரிந்து சென்ற உறவுகள் சேர்வது, நண்பர்களை சந்திப்பது என மகிழ்ச்சியான நாளாக இன்று இருக்கும். இன்று வரவு, செலவு விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய நாளாக இருக்கும்.
இன்று வியாபாரத்தில் மனதிற்கு ஏற்றாற்போல் பலன்கள் வரும்.பணியிலும் முன்னேற்றம் ஏற்படும். பணப் பரிவர்த்தனைகளில் பிரச்சனை முடிவுக்கு வரும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நரசிம்மர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று மனதிற்கு நிறைவான நாளாகவும், கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேம்படக்கூடிய நாளாகவும் இருக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து அன்பு அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும்.
இன்று குடும்பச் செல்வம் பெருகும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுக்கு உதவ முன்வருவீர்கள்.
இன்று கோதுமை தானம், அன்னதானம் செய்வதும் கிரக தோஷத்தை போக்கக்கூடிய நன்மைகளை தரும்.
தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு திருப்திகரமாகவும், மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகவும் இருக்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய புதிய வேலை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
நண்பர்களின் உதவி மனிதருக்கு மகிழ்ச்சியை தரும். வண்டி வாகனம் வாங்குவது விற்பது தொடர்பான உங்களின் செயல்பாடு மனதிற்கு திருப்தியை தரும். பணப் பலன்களையும் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
மகர ராசி
மகர ராசி நேயர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதிற்கு திருப்திகரமான நாளாகவும் இருக்கும்.இது உங்கள் மனதில் மகிழ்ச்சியைத் தரும். உத்யோகத்தில் முயற்சி செய்பவர்கள். பெற்றோரின் உடல் நலம் குறைவதால் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
இன்று மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபாடு செய்வதும், பசுக்களுக்கு உணவளிப்பதும் நன்மை தரும்.
கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சினைகள் கூட தீரும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சில வேலைகள் முடியும். சில நல்ல செய்திகளும் கிடைக்கும். சுக்ர பகவானின் சஞ்சாரம் ஆறாம் இடத்தில் இருப்பதால் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய நாளாக இருக்கும்.
புதிய தொழில் வியாபாரம் மேம்படுவதற்கான வாய்ப்புள்ள நாளாக இருக்கும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
மீன ராசி
மீன ராசி நேயர்களுக்கு இன்று ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். மனதிற்கு திருப்தியான நாளாக அமையும். சிலருக்கு நீண்ட தூர பயணம் செய்ய வேண்டியது இருக்கும். நண்பர்கள் அல்லது சகோதர சகோதரிகளின் மூலம் மனிதருக்கு மகிழ்ச்சியும், ஆதரவையும் பெறலாம். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். பிரிந்து இருந்த நண்பர்கள் ஒன்று சேர்வர்.