ஜோதிடம்
02-07-2023 இன்றைய ராசி பலன் – அதிஸ்டத்தை அள்ளப்போகும் ராசி
02-07-2023
இன்றைய ராசி பலன் – அதிஸ்டத்தை அள்ளப்போகும் ராசி
இன்று, ஜூலை 2 ஆம் தேதி, ஞாயிறு, நண்பகலுக்குப் பிறகு விருச்சிகத்திற்குப் பிறகு தனுசு ராசிக்கு சந்திரன் மாறுகிறார். அதே சமயம் மதியம் வரை கேட்டை நட்சத்திரத்திலும் பின்னர் மூல நட்சத்திற்கு மாறுகிறார். இன்று மகரம், கும்ப ராசியினருக்கு மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். திடீரென்று பணம் கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மேஷம் இன்றைய ராசி பலன் – Aries
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் இவற்றில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சில விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் என்பதால் பணியிடத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கும். சரியான திட்டமிடலுடன் செயல்படுங்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தகராறு ஏற்படலாம்.
ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள் ஆகும். அது தொடர்பான முயற்சிகளை துவக்கலாம் இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.
உயர்கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரலாம்.
பொருளாதாரத்தில் இருந்து வந்த பற்றாக்குறை மறையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல லாபம் பெறுவார்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini
பொருளாதாரத்தில் சிறிய பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். அரசு துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமைகிறது.
புதிய வேலைவாய்ப்புகளை பற்றிய சிந்தனை மனதை ஆட்கொள்ளும் தற்போது பணிபுரியும் இடம் சற்று மன அழுத்தம் மிகுந்ததாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே புதிய பணிகளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
கடகம் இன்றைய ராசி பலன் – Cancer
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பழு சற்று அதிகமாக இருக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் வேலைதேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
தங்களின் எதிர்பார்ப்பின் படி வேலை மாற்றத்திற்கான சுமூகமான சூழல் இன்று நடைபெறும். பெண்களுக்கு ஏற்ற மிகு நாள் ஆகும். எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo
வரவு செலவு நன்றாக இருக்கும் மாணவர்கள் கல்வியில் பளிச்சிடுகிறார் குடும்பத்தில் ஒற்றுமை நிகழும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும் நீங்கள் எடுக்கின்ற புது முயற்சிகள் வெற்றியடையும்.
பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் பெரிதாக மனதை பாதித்தது என்று இல்லை உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி இன்றைய ராசி பலன் – Virgo
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வார்கள். இவைகளில் வெற்றி உண்டாகும். உடன்பிறந்தவர் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆகும். பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.கல்வியை முடித்து வேலை தேடுபவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும்.
துலாம் இன்றைய ராசி பலன் – Libra
வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.
ஒரு சிலர் புதிய வாகனங்கள் வாங்குவோர் சொத்துக்கள் வாங்குவது மற்றும் எதிர்கால சேமிப்பிற்காக முதலீடுகள் செய்வது போன்றவற்றில் பலருடைய எண்ணங்கள் ஈடுபடும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகளில் சற்று இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உகந்த காலம் ஆகும்.
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.
கணவன் மனைவி ஒற்றுமை சீராகச் செல்லும் உடல்நலம் வயதானவர்களுக்கு சிறு சிறு பிரச்சினைகளைக் கொடுத்தாலும் வெற்றியே உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நாள் ஆகும். என்ஜினீயரிங் தொடர்பான கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை உங்கள் கண்முன் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும் நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும்.
மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn
சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல நிலைமையை அடைவார். குழந்தை பாக்கியம்போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அது தொடர்பான வைத்தியங்களை ஆரம்பிக்கலாம்
நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை குடும்பத்திற்காக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை. சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும்.
கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.
உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களுக்கு இனிய நாளாக இந்த நாள் அமைந்தாலும், நாளின் பிற்பகுதியில் சற்று விட்டு கொடுத்து செல்வது குடும்ப அமைதியே மேம்படுத்தும்.
மீனம் இன்றைய ராசி பலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். இவைகளில் வெற்றியும் காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் நன்மையில் முடியும்.
You must be logged in to post a comment Login