ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (26.03.2022)

Published

on

Medam

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது.

அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.

குடும்பத்தோடு ஆன்மீக பயணம் செல்வீர்கள்.

 

Edapam

இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் கவனம் தேவை.

உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.

Mithunam

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும்.

குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கும்.

வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் லாபம் அதிகரிக்கும்.

 

Kadakam

இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும்.

விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். மனக்குழப்பம் சற்று அதிகரிக்கும்.

 

Simmam

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

திடீர் பண வரவு வரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

 

Kanni

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடிவரும்.

வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

 

Thulaam

நினைத்த காரியம் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி தேடி வரும்.

தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சொந்த பந்தங்களின் வரவால் மனதில் உற்சாகம் பிறக்கும்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பேச்சில் கோபம் வேண்டாம் நிதானத்தை கடைபிடிக்கவும்.

 

Viruchchikam

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திடீர் பணவரவு உண்டாகும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும்.

உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

 

Thanusu

கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும்.

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு மன அமைதியைத் தரும்.

Magaram

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும்.

பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும்.

வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்

 

 

Kumbam

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.

எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

Meenam

தொழில் வியாபாரத்தில் புதிய நபர்களால் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும்.

நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

.#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version