ஜோதிடம்
இன்றைய ராசி பலன் (15.01.2022)
Medam
தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பண வருமானம் பெருகும்.
Edapam
குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குழந்தைகள் வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
Mithunam
சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும்.
குடும்பத்தினர் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.
Kadakam
பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும்.
குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.
Simmam
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும்.
வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள்.
வீட்டிற்குத் தேவையான புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.
Kanni
வேலையில் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும்.
பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பிள்ளைகளால் சுபகாரியங்கள் நடைபெறும்.
Thulaam
தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.
Viruchchikam
செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். இன்று உங்களுக்கு மன உளைச்சல் உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.
Thanusu
உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
Maharam
வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.
சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
வேலையில் இருப்பவர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
Kumbam
பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளால் சுப காரியங்கள் நடைபெறும்.
Meenam
தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. லாபமான நாள். திடீர் பண வரவு வரும்.
#Astrology
You must be logged in to post a comment Login