ஜோதிடம்
இன்றைய ராசி பலன் (28.11.2021)
Medam
புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
Edapam
பெரியவர்கள் ஆலோசனையைக் கேட்பதன் மூலம் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
பெற்றோர் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
Mithunam
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர்.
வெளியூர் பயணங்கள் நன்மையில் முடியும். உற்சாகத்துடனும் புதுப் பொலிவுடனும் காணப்படுவீர்கள்.
Kadakam
தேவையற்ற பொருட்களை வாங்குதில் ஆர்வத்தை குறைத்தால் தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்.
உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கி மனம் நிம்மதியடையும்.
Simmam
திருமண பேச்சுக்கள் நன்மையில் முடிவடையும். நண்பர்களுடன் திட்டமிட்ட வெளியூர் பயணம் செல்வீர்கள்.
பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
Kanni
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வெற்றியளிக்கும். பணியாளர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.
Thulaam
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியளிக்கும்.
சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வழக்குகள் முடிவு பெரும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துங்கள்.
புதியவர்கள் அறிமுகத்தால் மனதில் குழப்பங்கள் தோன்றும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
Viruchchikam
பூர்வீக சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த செய்தி தேடி வரும்.
வியாபாரத்தில் ஏனையவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.
Thanusu
வாகனங்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள்.
வீண் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது, நண்பர்களுக்கு உதவுவீர்கள்.
Maharam
பிறரை நம்பி பண கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கவனம் செலுத்துங்கள்.
உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். செலவுகள் அதிகரிக்கும்.
Kumbam
திட்டமிட்ட காரியங்கள் தடங்கலின்றி நடைபெறும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
பொருளாதாரம் சிறப்பாக அமையும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
Meenam
உயர் கல்வி வாய்ப்பு தேடி வரும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும்.
நண்பர்கள் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். மனக்குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
#Astrology
You must be logged in to post a comment Login