ஜோதிடம்
பித்ரு தர்ப்பணம்! – இன்று ஆரம்பம்
பித்ரு தர்ப்பணம்! – இன்று ஆரம்பம்
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் மஹாளய பட்சம் எனும் புண்ணியகாலம் இன்று முதல் தொடங்குகிறது.
இந்த பதினைந்து நாள்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை.
வாழ்க்கையில் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள இவ் மகாளய பட்சம் வழிபாடு உதவுகின்றது.
நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்துக்கு வர இயலாது. ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீவதிக்க பூலோகத்துக்கு வருகின்றனர் எனவும், பின் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் செகின்றனர் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த 15 நாள்களும் அவர்கள் நம் வீட்டில்தான் இருப்பார்கள்.
முக்கியமாக மகாளயபட்ச நாளில் அத்தியாவசியப் பொருள்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.
யார் ஒருவர் தன் முன்னோருக்கு அமாவாசை தோறும் தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவரது குடும்பம் அமைதி பெற்று, மங்கள வாழ்வு பெற்று உயரிய நிலைக்கு சென்று கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
ஆகவே ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காக்கும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டியது மனிதர்களின் கடமையாகும். தர்ப்பணம் செய்வோம். முன்னோர்களின் ஆசி பெறுவோம்.
You must be logged in to post a comment Login