ஜோதிடம்
உங்கள் ராசியும் அதிர்ஷ்டம் தரும் கற்களும்
உங்கள் ராசியும் அதிர்ஷ்டம் தரும் கற்களும்
அனைவரும் அதிர்ஷ்டக் கற்கள் அணிந்தால் அதிர்ஷ்டம் வரும் என்பது ஜோதிட சாஸ்திரம்.
அவ்வாறு ராசிகளுக்கேற்ற அதிர்ஷ்டக் கற்களை அணிந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இவை கிரகங்களை வலிமையாக்குவதோடு அதனை அணிந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் கொடுக்கும்,
ராசிக் கற்களை அணியும்போது தங்கள் ராசிக்கு எந்த கற்களை அணிந்தால் நன்மை பயக்கும் என்று அறிந்த பின்னரே அணிய வேண்டும்.
அதிர்ஷ்டக் கற்களை வாங்கி தங்கள் உடலில் படும்படி அணிந்துகொண்டால் அந்தக் கற்களின் ஆற்றல் எமது உடலில் பாய்ந்து உடல் நலக் குறைபாடுகளைப் போக்குவதோடு அதிர்ஷ்டகரமான வாழ்வையும் அள்ளித்தரும்.
எனவே எந்த ராசிக்காரர்கள் எந்த கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் பொங்கும் என பார்ப்போம்.
மேடம்
மேட ராசிக்காரர்கள் வைரம் மற்றும் பவளம் அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சிறந்து விளங்கச் செய்யும்.
இடபம்
இடப ராசிக்காரர்கள் மரகதக் கற்களை அணிந்தால் மிகவும் நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் முத்து அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம். தொழில் வாய்ப்புக்களை சிறப்படையச் செய்யும். பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் நீல வண்ண முத்து அணிந்தால் செல்வம் கொழிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கம் (Ruby) அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். வாழ்வில் உயர்வைத் தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நீலக் கல்லை அணிந்தால் என்றும் நல்லது நடக்கும்.
துலாம்
பச்சை மணிக்கல் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிக்கல்லாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நினைவாற்றலை அதிகப்படுத்தும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள், புஷ்பராகம் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஆம்பர் கல்லை அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன் செல்வமும் கொழிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வைர நீலக் கல்லை அணியலாம். இந்தக் கல்லை அணிவது நன்மையைக் கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால் கிரகங்கள் வலிமை பெற்று, செல்வத்தை அதிகரிக்கும்.
You must be logged in to post a comment Login