கட்டுரை

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ள புதிய அம்சம்

Published

on

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ள புதிய அம்சம்

ஆப்பிள் “IOS” பயனார்களுக்கு வாட்ஸ் அப்பில் ஹெச்டி(HD)தரத்திலான படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிற நிலையில் ஹெச்டி(HD) தரத்திலான படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் அம்சம் கொண்டுவரப்படட்டது .

எனினும் இது android பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஆப்பிள் “IOS” பயனர்களுக்கும் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தகவலின்படி “HD”படங்கள், காணொளிகளை பகிர்வதுடன் இடுகைகளிலும்(Status) HD தரத்தில் புகைப்படங்கள், காணொளிகளை பதிவிடலாம் என குறிப்பிடப்படுகிறது.

இந்த அம்சம் தற்போது பீட்டா பதிப்பை பயன்படுத்தும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே சோதனைக்காக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த புதிய அம்சத்தை எப்போது தங்களின் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டா நிறுவனம் வழங்கும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Exit mobile version