கட்டுரை
வாட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்
வாட்ஸ்அப் செயலியில் புதியதொரு சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஒலிவழி (voice record) குறுஞ்செய்திகளையும் இனி ஒரு முறை மட்டுமே (One time view) கேட்கக் கூடியவாறு அனுப்பும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த 2021 இல் புகைப்படம் மற்றும் காணொளி குறுஞ்செய்திகளை ஒரு முறை மட்டுமே பார்க்க கூடிய வசதியை ஏற்படுத்தியிருந்தது.
இப்போது அதே வசதியை ஒலிவழி குறுஞ்செய்திகளுக்கும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வசதியை இன்னும் சில நாட்களில் புதிய அப்டேட் மூலம் அனைவரும் பயன்படுத்தலாம் என மெட்டா அறிவித்துள்ளது.