தொழில்நுட்பம்

கூகிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு. Passkeys இனை பயன்படுத்த ஊக்கப்படுத்தும் Google நிறுவனம்.

Published

on

கூகிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு.
Passkeys இனை பயன்படுத்த ஊக்கப்படுத்தும் Google நிறுவனம்.

இலகுவான, வேகமாக மற்றும் பாதுகாப்பான ஒரு கடவுச்சொல் உள்ளீட்டு முறையானது, பழங்காலத்து எழுத்துக்கள், எண்ணங்கள் மற்றும் விசேட குறியீடுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பயன்படுத்தப்படுகின்றது.

Passkeys என்பது உங்களை அடையாளப்படுத்துவதாக அல்லது உங்களுடைய சொந்த தொலைபேசி அல்லது கணனியினை அடையாளப்படுத்துவதாக இருக்கும். இவன் எல்லாம் புரிந்துகொள்ள கடினமாக இருக்கின்றதா ? இன்னும் இலகுவாக புரியும் படியாக சொல்கின்றேன். Passkeys என்பது கடவுச்சொற்கள் அற்ற ஒரு முறையாகும். இதை உங்களுடைய Touch ID அதாவது fingerprint மூலமாகவும் face ID போன்ற உங்களுடைய தனிப்பட்ட உயிரியலை பயன்படுத்தி உங்களுடைய கணக்குகளுக்குள் கடவுச்சொல் இல்லாமல் நுழைந்நுகொள்ள முடியும். அத்துடன் உங்களுடைய கணனி அல்லது தொலைபேசி என்பவற்றில் இருந்தும் உள்நுழைந்துகொள்ள முடியும். இணையத்தில் இணைக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் தனித்தனியாக அடையாளங்காணக்கூடியதாக இருக்கும். உங்களுடைய கணக்குகளை உங்களுடைய சாதனங்களுடன் இணைப்பதன் மூலம் கடவுச்சொற்கள் இல்லாமல் கணக்குகளில் உள்நுழைந்துகொள்ள முடியும். இப்போது Passkeys பற்றிய ஒரு சிறு விளக்கம் கிடைத்து இருக்கும் என்று நம்புகின்றேன்.

பிரபல இணைய சேவைகள் வழங்கும் நிறுவனமான கூகிள், தங்களுடைய கணக்குகளில் உள்நுழைவதற்கு இதுவரை பிரதானமாக கடவுச்சொற்களை பயன்படுத்துகின்றார்கள். கூகிளின் தற்போதைய அறிவிப்பின் படி Passkeys முறையினை பிரதானமானதாக மாற்றப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள். Passkeys முறை பிரதானமாக இருந்தாலும் பயனர்கள் வழக்கம் போன்று கடவுச்சொற்களையும் பயன்படுத்தி கணக்குகளில் உள்நுழைய முடியும் என்று அறிவித்து இருக்கின்றார்கள்.

கடந்த வருடம் Google Workspace and Cloud accounts மற்றும் Google Chrome ஆகியவற்றில் Passkeys முறையினை அறிமுகப்படுத்தியிருந்தார்கள் என்பது குறிப்படத்தக்கது.

Exit mobile version