தொழில்நுட்பம்

Google Slide இன் புதிய feature…!!!

Published

on

Google Slide இன் புதிய feature…!!!

Google slide அறிமுகப்படுத்திய ஒரு சுவாரசியமான புதிய feature ஒன்றினை பார்க்கலாம். Google slide என்பது Google நிறுவனத்தின் presentation என்பவற்றை தயாரிக்க, காட்சிப்படுத்த மேம்படுத்த, மாற்றம் செய்ய பயன்படும் இணைய மென்பொருள் சேவை ஆகும்.

Google Sheet, Google Docs, Google Slide போன்றவை மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருவதுடன் இணைய மென்பொருள் சேவை என்பதால் குழுக்களாக வேலை செய்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்களாகவும் இருக்கின்றது.

நீங்கள் ஒரு குழுவாக presentation ஒன்றினை தயாரிக்கின்றீர்கள் என்றால் Google slide இல் புதிய ஆவணம் ஒன்றினை உருவாக்கி, அதற்கு உங்களுடைய நண்பர்களுக்கு அனுமதி கொடுத்து பகிர்ந்துகொள்வதன் ஊடக குழுவாக தயாரித்துக்கொள்ள முடியும்.

Google slide இன் புதிய வசதி

நீங்கள் குழுக்களாக வேலை செய்யும் போது இதுவரை ஒன்றாக வேலை செய்பவர்களை மட்டுமே அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. இப்போது அறிமுகப்படுத்திய வசதியின் ஊடாக குழுக்களாக வேலை செய்யும் போது குழுவில் இருப்பவர்களில் Mouse Cursor இருக்கும் இடத்தினை பார்த்து தெரிந்துகொள்ள முடியும். இது சுவாரசியமான ஒரு வசதியாகும். இந்த வசதி Canva இல் நீண்டகாலமாக இருந்தபோதிலும் Google Slide இற்கு இப்போது தான் அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். இன்னும் ஒருசில வாரங்களில் உலகம் முழுவதும் இருக்கும் பயனர்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version