தொழில்நுட்பம்

Windows Snipping Tool இற்கு புதிய மேம்படுத்தப்பட்ட வசதியினை வெளியிட்ட Microsoft நிறுவனம்.

Published

on

Windows Snipping Tool இற்கு புதிய மேம்படுத்தப்பட்ட வசதியினை வெளியிட்ட Microsoft நிறுவனம்.

Windows Snipping tool பற்றி தெரியாதவர்கள் ஒருசிலரே இருப்பார்கள் அந்த அளவிற்கு பயனுள்ள windows இயங்குதளங்களுடன் வரும் ஒரு மென்பொருள் ஆகும். இது திரையில் உள்ளவற்றை அப்படியே புகைப்படமாக(screenshot) ஆக எடுத்துக்கொள்ள பயன்படும். இங்கு 3 விதமாக திரையினை நகல் எடுத்துக்கொள்ள முடியும்.

1. முழுத்திரையினையும் அப்படியே நகல் எடுத்துக்கொள்ளுதல்.
2. தேவையான மென்பொருளின் திரையினை மாத்திரம் நகல் எடுத்துக்கொள்ளுதல்.
3. விரும்பிய இடத்தினை மட்டும் தெரிவு செய்து நகல் எடுத்துக்கொள்ளுதல்.

கடைசியாக வெளியிட்ட Snip & Sketch (பழைய snipping tool இற்கு பதிலாக புதிய இடைமுகத்துடன் வெளியிடப்பட்ட snipping tool ஆகும்.) இல் திரையினை கானொளியாக எடுத்துக்கொள்ள முடியும் அத்துடன் மென்பொருளின் மூலம் நேரத்தை தெரிவு செய்து அந்த நேர இடைவெளியில் திரையினை நகல் எடுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் snipping tool இற்கு புதிய ஒரு வசதியினை கொண்டுவந்துள்ளார்கள்.

இனி நகல் எடுத்த திரையில் உள்ள எழுத்துக்களை இலகுவாக நகல் எடுத்துக்கொள்ள முடியும்.

Optical character recognition (OCR) எனும் தொழில்நுட்பத்தை கொண்டுவந்து இருக்கின்றார்கள். இதன் மூலம் நாம் நகல் எடுக்கும் திரையில் இருக்கும் எழுத்துக்களை தெரிவு செய்து copy, paste செய்துகொள்ள முடியும்.

இது iPhone, Android என்பவற்றில் புகைப்படங்களில் தெரியும் எழுத்துக்களை copy, paste செய்துகொள்ள முடியும் என்பதுடன் இது windows இயங்குதளங்களிற்கு புதிய ஒரு வசதியாகும்.

Exit mobile version