தொழில்நுட்பம்

Audio enhance இனி Website இல் செய்யலாம்…!!!

Published

on

Audio enhance இனி Website இல் செய்யலாம்…!!!

நாம் தொலைபேசிகளில் Voice Records செய்யும் போது இரைச்சல், மற்றும் தேவையற்ற சத்தம் சேர்ந்து எங்களுடைய voice records இனை குழப்பிடும். அதனை சரிசெய்ய கணனி அல்லது தொலைபேசியில் இநற்கான பிரத்தியோக செயலிகளை/மென்பொருட்களை பயன்படுத்தி சரிசெய்ய வேண்டியதாக இருக்கும். இது ஒப்பீட்டளவில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதுடன் கணனியில் நினைவகத்தையும் எடுத்துக்கொள்ளும் இதனை கருத்திற்கொண்ட Adobe நிறுவனம் Adobe Podcast Beta வெளியீட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்து Audio Enhance வசதியினை அவர்களுடைய வலைத்தளத்தில் செய்துகொள்ள கூடிய வகையில் வடிவமைத்து வெளியிட்டு இருக்கின்றார்கள்.

Adobe Podcast இல் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை Enhance அனுமதிப்பதுடன் மாதம் ஒன்றிற்கு 60 நிமிடங்கள் வரை இலவசமாக வழங்குகின்றார்கள் அதற்கு மேல் பயன்படுத்துவதற்கு பணம் செலுத்த வேண்டும். Adobe Podcast இன் Enhance செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வருவதால் மிகவும் துல்லியமாக இருப்பதாக பலர் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள்.

Exit mobile version