கட்டுரை

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் அம்சம்

Published

on

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் அம்சம்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் தற்போது காணொளிகளை (HD) தெளிவுடன் பகிரும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உயர்-வரையறையில் படங்களை எப்படி அனுப்புவது போன்றே, நீங்கள் மற்றவர்களுடன் காணொளியை பகிரும்போது HD காணொளி அம்சத்தை மாற்றலாம்.

வாட்ஸ்அப்பில் உள்ள காணொளிகள் 480p வரை மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது பயனர்கள் 720p தெளிவுடன் பகிரலாம்.

 

 

எச்டியில் (HD) காணொளிகளை பகிர விரும்பினால், பதிவேற்றும்போது திரையின் மேற்புறத்தில் உள்ள ‘எச்டி’ (HD) பட்டனைத் தட்டி அதனை (HD) தரத்தில் பதிவேற்றலாம்.

குறுஞ்செய்திகள், அழைப்புகள் மற்றும் படங்களைப் போலவே, காணொளிகளும் WhatsApp இன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாராவது எச்டியில் (HD) காணொளியை அனுப்பினால், காணொளியின் கீழ் இடதுபுறத்தில் உள்ள சிறிய ‘எச்டி’ பேட்ஜைப் (HD BADGE) தென்படும்.

இந்த அம்சம் அனைத்துப் பயனர்களுக்கும் பரவி வருவதாகவும், சில சாதனத்தில் கிடைக்காவிட்டால், அடுத்த சில நாட்களில் இருக்கும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version