தொழில்நுட்பம்

Google Keep பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி…!!!

Published

on

Google Keep பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி…!!!

பிரபல நிறுவனமான கூகிள் நேற்றைய தினம் புதிய Update ஒன்றினை Google Keep for Android இற்கு வெளியிட்டு இருக்கின்றார்கள். சிறிய குறிப்புக்களை எடுக்க பயன்படும் Google Keep சேவையானது நீண்ட காலமாக அடிப்படை வசதிகளுடன் மட்டுமே காணப்பட்டுவந்தது. குறிப்பு எடுப்பதன் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பிரபல நிறுவனத்தின் சேவையானது நீண்ட காலமாக இருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

கூகிள் நிறுவனம் வெளியிட்ட புதிய Update இல் எழுத்துக்களின் அளவினை மாற்றுதல், நிறங்களை சேர்த்தல், தடிப்பான எழுத்துக்களாக மாற்றுதல் போன்ற அடிப்படை அம்சங்களை எடுத்துவந்துள்ளார்கள். இவை எல்லாம் அடிப்படை விடயங்களாக இருந்தாலும் இதுவரை காலமும் இந்த வசதிகள் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நான் Google Keep for iPhone மற்றும் Web சேவைகளினை பயன்படுத்துகின்றேன். ஆவணங்களை உருவாக்குவதற்கும் சேமித்து வைப்பதற்கும் Google இன் Drive சேவையினை பயன்படுத்துவதால் Google Keep எனக்கு மிகவும் இலகுவாக இருக்கும். மற்றைய போட்டியாளர்களின் சேவைகளுடன் ஒப்பிடும் போது அடிப்படை வசதிகள் கூட குறைவாக இருக்கும் ஆனால் தற்போது கூகிள் நிறுவனம் Google Keep இல் மாற்றங்களையும் புதிய அம்சங்களை வழங்குவதில் கவனம் செலுத்திவருகின்றார்கள். கூகிள் நிறுவனம் தொடர்ந்து Google Keep இனை மேம்படுத்தும் என்று நம்புகின்றோம்.

நீங்கள் Google Keep பயன்படுத்துபவராக இருந்தால் Google Keep for Android செயலியினை Play store சென்று update செய்துகொள்ளுங்கள்.

Exit mobile version