தொழில்நுட்பம்
Microsoft Excel இல் இனி Python இனைப்பயன்படுத்த முடியும்…!!!
Microsoft Excel இல் இனி Python இனைப்பயன்படுத்த முடியும்…!!!
Microsoft நிறுவனமானது பிரபலமான programming language ஆன python இனை தங்களுடைய Microsoft office இல் வரும் Excel இற்கு எடுத்து வருகின்றது. இந்த புதிய வசதியானது இன்று முதல் மக்களின் பாவனைக்கான வெளிவிடப்படுகின்றது. இது தரவுகளை python இன் plots மற்றும் libraries இனைப்பயன்படுத்தி தரவுத்தளங்கள், அட்டவனைகள் என்பவற்றை கையாள அனுமதிக்கும்.
இந்த புதிய வசதியினை பெற்றுக்கொள்ள நீங்கள் மேலதிகமாக எதனையும் பதிவிறக்கம் மற்றும் install செய்யத்தேவையில்லை. தரவுப்பட்டையில் இருக்கும் Python என்பதை தெரிவு செய்வதன் மூலமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். Anaconda உடன் ஒப்பந்தம் செய்து இருப்பதால் python இன் libraries ஆன pandas, statsmodels and Matplotlib என்பவற்றை Microsoft excel இல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Python in Microsoft Excel இன்று முதல் Microsoft 365 பயனாளர்களுக்கு beta channel மூலமாக வழங்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login