தொழில்நுட்பம்

இங்கிலாந்து சாலைகளில் AI Camera, 3 நாட்களில் 300 இற்கும் சட்டமீறல்கள் பதிவு…!!!

Published

on

இங்கிலாந்து சாலைகளில் AI Camera, 3 நாட்களில் 300 இற்கும் சட்டமீறல்கள் பதிவு…!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது தினமும் அசுர வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பமாகும். செயற்கை நுண்ணறிவினைப்பயன்படுத்தி, பலவிதமான செயற்பாடுகள் நடந்தவண்ணமுள்ளது சிலர் அதனை நல்லதுக்காகவும் இன்னும் சிலர் அதனை தவறான விடயங்களுக்காகவும் பயன்படுத்துகின்றார்கள்.

இங்கிலாந்தில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், சட்டங்களை மீறும் சாரதிகளை கண்டுபிடிக்கவும் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்துகின்றார்கள்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கமராக்களை இங்கிலாந்தின் பெரும்பாலான சாலைகளில் நிறுவியன் மூலமாக முதல் மூன்று நாட்களில் 300 இற்கு அதிகமான சட்டமீறல்களை கண்காணித்து இருக்கின்றார்கள்.

இவற்றில் 180 Seat belt அணியாத சம்பவங்களும், 117 தொலைபேசி பாவனையும் அடங்கும்.

இங்கிலாந்து பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக Acusensus எனும் நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்தின் பெரும்பாலான வீதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கமராக்கள் ஆனாது வீதியில் பயணிக்கும் வாகனங்களை கண்கானித்து அவர்களுடைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமானதான இருந்தால் அதனை அதியுயர் வேகத்தில் புகைப்படமாக எடுத்து அதனை மனிதர்கள் பார்வையிட்டு உறுதிப்படுத்துவதற்காக அனுப்பும். பொலிஸ் தலமையலுவலகத்தில் உறுதிப்படுத்திய பின்னர் அது தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version