தொழில்நுட்பம்
பப்ஜி கேம் மீதான தடை நீக்கம்..!
பப்ஜி கேம் மீதான தடை நீக்கம்..!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்து இருந்தது. இந்நிலையில் மீண்டும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமான பப்ஜி விளையாட்டு இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதீத வரவேற்பை பெற்றது.
எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த காரணத்தினால் பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது.
அதன் போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது
கிராப்டன் என்ற தென்கொரியா நிறுவனம் சோதனை அடிப்படையிலான அனுமதியை இந்தியாவிடம் பெற்றுள்ளது.
அத்துடன் பப்ஜி விளையாட்டிற்கான இந்த அனுமதியானது 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
#Technology
You must be logged in to post a comment Login