உலகம்
மீண்டும் ஊழியர்கள் பணிநீக்கம்?


ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
அந்த வரிசையில், தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்யும் முதலாவது பெரிய டெக் நிறுவனமாக இருக்கும். இதுபற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்டுகிறது.
இந்தமுறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுபற்றிய செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மெட்டா பதில் அளிக்கவில்லை.


பா="mvp-cat-date-wrap left relative"> ஜோதிடம்4 வா1 கன/span>
You must be logged in to post a comment Login