தொழில்நுட்பம்

இனி 100 Media Files-ஐ ஒரே சமயத்தில் அனுப்பலாம் – அசத்தும் வாட்ஸ்அப்

Published

on

வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் 100 மீடியா ஃபைல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் 30 மீடியா ஃபைல்களை மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.4.3 வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய அம்சம் தற்போது வழங்கப்பட்டு உள்ளது.

புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய செயலியினுள் ஒரே சமயத்தில் 30-க்கும் மேற்பட்ட மீடியா ஃபைல்களை தேர்வு செய்து முயற்சிக்கலாம். 30-க்கும் மேற்பட்ட ஃபைல்களை தேர்வு செய்ய முடியும் பட்சத்தில் உங்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை இந்த அம்சம் வழங்கப்படவில்லை எனில், உங்களால் 30-க்கும் அதிக ஃபைல்களை தேர்வு செய்ய இயலாது. அந்த வகையில், கிடைக்காதவர்கள் இந்த வசதியை பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

தற்போது 100 மீடியா ஃபைல்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டு இருப்பதை கொண்டு, ஒரே புகைப்படம் அல்லது வீடியோவை பலமுறை தேர்வு செய்ய முடியாது. தற்போது டெஸ்டிங்கில் இருப்பதால், இந்த அம்சம் விரைவில் அனுவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வெளியிடப்படலாம். எனினும், சரியான வெளியீட்டு காலம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

பீட்டா டெஸ்டிங் ஒருபுறம் இருக்க, வாட்ஸ்அப் தனது ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் பகுதியில் சில புதிய அம்சங்களை அறிவித்து இருக்கிறது. இந்த அம்சங்களை கொண்டு வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு புதிய வழிகளில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

பிரைவேட் ஆடியன்ஸ்:

பெயருக்கு ஏற்றார்போல் இந்த அம்சம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை யார் பார்க்க வேண்டும் என்பதை குறிக்கும். இது முழுக்க முழுக்க புதிய அம்சம் இல்லை என்ற போதிலும், இது பிரத்யேக அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும். சமீபத்தில் தேர்வு செய்தபடி யார்யாருக்கு ஸ்டேட்டஸ் காண்பிக்கப்பட வேண்டும் என்ற காண்டாக்ட்களின் பட்டியல் சேமிக்கப்பட்டு, அடுத்த அப்டேட்டிற்கு தானாக பயன்படுத்தப்படும்.

வாய்ஸ் ஸ்டேட்டஸ்:

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சமாக 30 நொடிகளுக்கு வாய்ஸ் நோட்களை தங்களின் ஸ்டேட்டஸ்-ஆக வைத்துக் கொள்ளலாம். மிகமுக்கிய தனிப்பட்ட வகையில் அப்டேட்களை தெரிவிக்கும் மற்றொரு வழிமுறை இது என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ்:

இந்த அம்சம் கொண்டு ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஸ்வைப் அப் செய்து அதிகபட்சம் எட்டு எமோஜிக்களை பயன்படுத்தி தங்களின் கருத்தை தெரிவிக்க முடியும். இது இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே செயல்படுகிறது.

ஸ்டேட்டஸ் ப்ரோஃபைல் ரிங்ஸ்:

சாட் லிஸ்ட், க்ரூப் பட்டியல் மற்றும் காண்டாக்ட்களில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பார்க்கும் வழிமுறையை இது எளிமையாக்கி விடும். குறிப்பிட்ட காண்டாக்ட் ஸ்டேட்டஸ் வைத்திருப்பின், அந்த பயனரின் ப்ரோஃபைல் படத்தை சுற்றி ரிங் ஒன்று காணப்படும். இதை கொண்டு அவர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

லின்க் பிரீவியூஸ்:

ஸ்டேட்டஸ்களில் ஒருவழியாக லின்க் பிரீவியூ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் எப்போது லின்க்-களை ஸ்டேட்டஸ் ஆக வைத்தாலும், அந்த லின்க்-இன் பிரீவியூ காண்பிக்கப்படும். இதை கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் குறிப்பிட்ட லின்க்-ஐ திறந்து பார்க்காமலேயே அந்த லின்க்-இல் எதுபோன்ற தரவு உள்ளது என்பதை சற்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைத்து விடும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

#technology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version