தொழில்நுட்பம்
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம்! சிறப்பம்சங்கள் பல
சியோமி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
இதன் சிறப்பம்சங்கள் ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்றே இடம்பெற்று இருக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ M5 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போன் வைட், புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1099 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 575 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 895 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரத்து 155 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
ரெட்மி நோட் 11R அம்சங்கள்
- 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் 700 பிராசஸர்
- மாலி G57 MC2 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
- 13MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 2MP போர்டிரெயிட் சென்சார்
- 5MP செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
#Redminote11r
You must be logged in to post a comment Login