தொழில்நுட்பம்
இணையத்தில் லீக் ஆன புது சாம்சங் ஸ்மார்ட்போன்!


சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சீனா டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து சாம்சங் நிறுவனம் மற்றொரு ஸ்மார்ட்போனை உருவாக்க கூட்டணி அமைத்துள்ளன.
இம்முறை இரு நிறுவனஎங்கள் கூட்டணியில் W23 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z போல்டு 4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது.
புதிய W23 ஸ்மார்ட்போனின் விலை 16 ஆயிரத்து 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரத்து 997 என நிர்ணயம் செய்யப்படலாம்.
அம்சங்கள்
- இந்த ஸ்மார்ட்போன் மொத்தத்தில் ஐந்து கேமரா சென்சார்கள்
- இதன் பின்புறம் 50MP பிரைமரி கேமரா
- 12MP அல்ட்ரா வைடு லென்ஸ்
- 12MP டெலிபோட்டோ கேமரா
- செல்பி எடுக்க 10MP மற்றும் 4MP அண்டர் டிஸ்ப்ளே கேமரா