தொழில்நுட்பம்
தள்ளுபடி விலையில் அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போன்!
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
“ரியல்மி பெஸ்டிவ் டேஸ்” சிறப்பு விற்பனையின் அங்கமாக புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது.
இதன்படி புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் டேல் எல்லோ, ட்ரிப்டிங் வைட் மற்றும் ஷேட் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விற்பனை செப்டம்பர் 23 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
அம்சங்கள்
- புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் AMOLED E4 ஸ்கிரீன்
- FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம்
- 128 ஜிபி மெமரி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
- புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், 5ஜி
- வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி
- யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
- 64MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா
- டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
You must be logged in to post a comment Login