தொழில்நுட்பம்
டுவிட்டரில் டிரெண்டாகும் ஒற்றை வார்த்தை சவால்! அது என்ன தெரியுமா?
சமூக வலைதளமான டுவிட்டரில் சவால் ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது.
ஒரே வார்த்தையில் தங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள் ‘ஒரு வார்த்தை’யை டுவிட்டரில் பதிவிட்டு தங்கள் கொள்கை, விருப்பம், கோட்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதில் அமெரிக்காவை சேர்ந்த ரெயில் நிறுவனம் முதலில் ‘ட்ரெயின்’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உலக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஒரு வார்த்தை சவாலை சந்திக்கும் வகையில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “டெமாக்கரசி” என்று ஒரே வார்த்தையில் ஜன நாயகத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் “கிரிக்கெட்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
தற்போது இது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You must be logged in to post a comment Login