தொழில்நுட்பம்
வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா?


ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் ஐபோனின் முந்தைய மாடல்களை விட அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று ஒரு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இதன்படி iPhone 14 Pro 128GB வேரியன்ட்டானது $1,100-ல் தொடங்கும் அதாவது இதன் விலை $1,099-ஆக இருக்கலாம்.
iPhone 14 Pro Max-ன் அடிப்படை 128GB வேரியன்ட்டின் விலை $ 1,200 முதல் அதாவது $1,199-ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2 மாடல்களின் அதிகாரப்பூர்வ விலை உறுதிப்படுத்தலுக்கு முன்னதாக, பிரபல லீக்ஸ்டர் ஆண்டனியும் மேற்கண்ட விலையில் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்த தகவல்கள் துல்லியமாக இருந்தால், புதிய iPhone Pro மாடல்கள் கடந்த ஆண்டை விட $100 (தோராயமாக ரூ.8,000) விலை அதிகமாக இருக்கும்.
அதாவது ஐபோன் 14 சீரிஸில் வெளியாகும் இரண்டு மாடல்களும் இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
முன்னதாக ஐபோன் 13 ப்ரோ இந்தியாவில் ரூ.1,19,900 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரூ.1,29,900-க்கு அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Iphone #Apple