கட்டுரை
வாட்ஸ்அப்பில் வந்த புதிய அப்டேட்..! இனி 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்பலாம்


வாட்ஸ்அப்பில் 2ஜிபி வரையிலான மீடியா ஃபைல்களை ஷேர் செய்யும் அசத்தலான புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல கட்டங்களாக இந்த அம்சத்தை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது, வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்,
இப்போது நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 2ஜிபி அளவு வரையிலான ஃபைல்களை அனுப்பலாம், இது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது முந்தைய வரம்பான 100MB-இல் இருந்து அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இது சிறு வணிகங்கள் மற்றும் பள்ளிக் குழுக்களுக்கு உதவியாக இருக்கும், பெரிய அளவிலான ஃபைல்களை அனுப்பும்போது வைஃபையைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.
உங்கள் பரிமாற்றம் எவ்வளவு நேரம் ஆகும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க, பதிவேற்றும் போது அல்லது பதிவிறக்கம் செய்யும் போது கவுண்டரைக் காண்பிப்போம்” என்று நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You must be logged in to post a comment Login