வணிகம்
Pelwatte dairy நிறுவனத்தின் புதிய திட்டங்கள்
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Pelwatte dairy நிறுவனம், பால் உற்பத்தியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், விவசாயிகள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவை வழங்கி பொருளாதாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. உள்நாட்டு கேள்வியை பூர்த்தி செய்வதற்காக நாட்டின் பாலுற்பத்தித் துறையை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந் நிறுவனம் விவசாயிகளுக்கு கால்நடைகளை வழங்கவும், தவணை முறையில் திருப்பி செலுத்தக்கூடிய வகையில் கொட்டகைகள் அமைப்பதற்கான நிதி உதவி வழங்கவும், பாலின் தரம் மற்றும் மாடுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய பாலுற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சியை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாலுற்பத்தி செய்யும் சமூகங்களுக்கு திணைக்களங்களுடனான விவசாய நிலப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவியதுடன், பால் கறத்தல்,குளிரூட்டல்,போக்குவரத்து,உற்பத்தி,விநியோகச் சங்கிலியின் ஆரம்பம் முதல் இறுதி வரையான அனைத்து முறையான செயல்முறைகளை நடைமுறைப்படுத்த இந்த நிறுவனம் உதவுகிறது. துணை சேவைகளுக்கும் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் 100% உள்நாட்டு பால் உற்பத்தியாளரான Pelwatte dairy நிறுவனம் அதன் தொடக்கத்திலிருந்து இந்த நாட்டை பாலில் சுயாதீனமாக்க வேண்டும் என்ற கனவால் உந்தப்பட்டு, ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கத்தில் விசேட கவனம் செலுத்துகின்றது.
இது பெறுமதிச் சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பைச் சேர்க்க உதவியுள்ளது.
You must be logged in to post a comment Login