அரசியல்
வகுப்பு தோழர்கள் மூவர் நாட்டின் உயர் பதவிகளில்!


வகுப்பு தோழர்கள் மூவர் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆன கதை…….!
உலக அரசியலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூன்று பதவிகளும் முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் பதவிகளை, ஒரே வகுப்பில் கல்வி பயின்ற மூன்று வகுப்பு தோழர்கள் வகித்துள்ளனர்.
ஆம். ரணில் விக்கிரமசிங்க, தினேஷ் குணவர்தன, அனுர பண்டார நாயக்க ஆகிய மூவரும், கொழும்பு ரோயல் கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள்.
‘உங்கள் எதிர்கால இலக்கு எது’, ‘யாரைபோல வர விரும்புகின்றீர்கள்’ என இவர்களின் வகுப்பாசிரியர் ஒருமுறையேனும் கேட்டிருக்கக்கூடும். இவர்கள் அதற்கு என்ன பதில் வழங்கியிருப்பார்கள் என தெரியவில்லை.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தினேஷ் குணவர்தன பிரதமராகியுள்ளார்.
மற்றுமொரு நண்பரான அனுர பண்டாரநாயக்க தற்போது உயிருடன் இல்லை. ஆனால் இவர் சபாநாயகர் பதவியை வகித்துள்ளார். எதிரணியில் இருந்து சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்தவர். பண்டாரநாயக்க தம்பதிகளின் மகன். இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா அம்மையாரின் தம்பியே அநுர பண்டாரநாயக்க.
ஆர்.சனத்