Connect with us

கட்டுரை

இலங்கை – நிர்க்கதிக்கு உள்ளாகும் இந்து ஆலயங்கள்!

Published

on

275680276 3259242291032104 5087423005785297900 n

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், இலங்கை மூன்று ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்தது. அவை, கண்டி, கோட்டை, யாழ்ப்பாணம் (Jaffna, Kandy, Kotte) ஆகியவை ஆகும். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் இலங்கை, தமிழ் அரசர்களாலும், சிங்கள அரசர்களாலும் காலத்திற்குக்காலம் ஆளப்பட்டு வந்துள்ளது. சில தமிழ் அரசர்கள் இலங்கை முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த வரலாறுகளும் உண்டு.

உதாரணம், இராஜராஜசோழன்.

15ம் நூற்றாண்டில் கோவாவை கைப்பற்றிய போர்த்துக்கீசர், பின்னனர் இலங்கையின் கோட்டை ராஜ்யத்தையும் கைப்பற்றினர். கோவாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, யாழ்ப்பாண ராஜ்யத்தின் கீழ் இருந்த மன்னார் தீவு, தமக்கு பாதுகாப்பான பிரதேசம் எனக் கருதிய போர்த்துக்கீசர் மன்னாரை கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாண ராஜ்யத்தின் மீது போர் தொடுத்து, யாழ்ப்பாண ராஜியத்தை 1621ம் ஆண்டு கைப்பற்றினர்.

1658ல் ஒல்லாந்தர் கோட்டை,யாழ்ப்பாண ராஜியங்களை கைப்பற்றிய போதும், கண்டியை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.

ஆங்கிலேயர்கள் 1803ம் ஆண்டு கண்டியை ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் என்ற தமிழ் மன்னனிடமிருந்து கைப்பற்றினர். தொடர்ந்து 1815ம் ஆண்டு இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து (இந்தியாவை ஒருங்கிணைத்தது போல்) ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷார் 1931ம் ஆண்டு இலங்கைக்கு சர்வ ஜன வாக்குரிமை வழங்கினர்.

அப்போது சட்டசபை உறுப்பினராக இருந்த சர்.பொன்.இராமநாதன் சர்வ ஜன வாக்குரிமைக்கு கடும் எதிர்ப்புத்தெரிவித்தார். இலங்கைக்கு சர்வ ஜன வாக்குரிமை வழங்கப்பட்டால், சிறுபான்மைத் தமிழர்கள், பெரும்பான்மை சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் நசுக்கப்படுவார்கள் என்ற காரணத்திற்காகவே சட்டசபை உறுப்பினராக இருந்த, சர்.பொன்.இராமநாதன் சர்வ ஜன வாக்குரிமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இலங்கை ஜனத்தொகையில் 72% சிங்கள பௌத்தர்கள், 27% தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட (இலங்கை முஸ்லிம்களின் தாய் மொழி தமிழ்).

சர்வ ஜன வாக்குரிமை வழங்கப்பட்டதை தொடர்ந்து இலங்கைக்கு டொமினியன் (Dominai Status) அந்தஸ்து வழங்க முற்பட்ட போது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress)அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைக்கு பூரண சுதந்திரம் வேண்டும் என போராடினர்.

1931ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சட்டசபைக்கான தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தனர்; இதனால் இலங்கையின் முதலாவது சட்டசபை தனிச்சிங்கள சபையாக (Pan Sinhal Cabinet)உருவானது.

1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது தமிழர்களின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் ஏனைய இனங்களுக்கும் சமபல பிரதிநிதித்துவம் (Balance Representatives) 50;50 வேண்டுமென வாதாடினார். பிரிட்டிஷார் பொன்னம்பலத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இலங்கை Unitary State ஆக பிரகடனம் செய்யப்பட்டது. தமிழர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

பின் தமிழர்களின் தலைவர் செல்வநாயகம் சமஷ்டி கேட்டு அகிம்சை வழியில் போராடினார். இலங்கை ஆட்சியாளர்கள் செல்வநாயகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்தனர்.

1956ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். அப்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு எதிரே சத்தியாகிரகம் இருந்தனர். பண்டாரநாயக்க சிங்கள காடையர்களை ஏவி சத்தியாகிரகம் இருந்த தமிழ் எம்.பிக்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

போலீசாரின் தாக்குதலில் பிற்காலத்தில் எதிர்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மண்டை பிளந்து ரத்தம் வழிந்தது. அப்போது பண்டாரநாயக்க தனது வாகனத்தில் நாடாளுமன்றத்துக்கு போய்க்கொண்டிருந்தார். IGP Sydney De Zoysa ஓடிச்சென்று சேர் தமிழ் எம்பிக்களின் மண்டை உடைந்து இரதம் வழிகிறது என்று சொன்னார். பண்டாரநாயக்க காரில் இருந்தவாறே சுங்கானை (pipe cigar) எடுத்து விட்டு let them taste என்று கூறி விட்டுச்சென்றார். அத்துடன் 1958ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களர்களைத் தூண்டி விட்டு கொழும்பிலிருந்து தமிழர்களை துரத்தியடித்தார்.

அகதிகளாக கொழும்பு இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களை யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு கப்பலையும் அனுப்ப மறுத்தார். தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடங்கி மூன்றாம் நாள் நேரு கொழும்பிலிருந்த இந்திய தூதுவர் மூலம் பண்டாரநாயக்கவை கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்துமாறும் இல்லா விட்டால் இந்தியா தலையிட வேண்டி வரும் எனவும் எச்சரித்தார்.

இதனைத்தொடர்ந்து பண்டாரநாயக்க தம்பையா என்ற தமிழனுக்கு சொந்தமான கப்பலில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த அகதிகளை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார். இந்த கலவரம் தான் பிரபாகரனை ஆயுதம் தூக்க வைத்தது. பிரபாகரனின் குடும்பமும் கப்பலில் அகதிகளாக யாழ்ப்பாணம் வந்தனர்.

1971ம் ஆண்டு பண்டாரநாயக்கவின் மனைவி சிறிமாவோ பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கு merit முறையை இல்லாமல் செய்து standadaization முறையை அமுல் படுத்தினார். இதனால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்தது. பின்பு சக வாழ்வு வேண்டும் என தனி நாடு என்ற தீர்மானத்தை வட்டு கோட்டையில் செல்வா முன் வைத்து அதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெரும் ஆதரவை வழங்கினர. பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் சத்தியசீலன் போன்றவர்கள தலைமையில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட தீர்மானித்தனர்.

இதனை வரலாறு படைத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் களப்போராட்டம் அனைவரும் அறிந்த நிகழ்வுகள்.

இலங்கையின் முதலாவது பிரதமர் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்தார். காலத்திற்குக்காலம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது கிழக்கு மாகாண தமிழர்கள் அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டப்பட்டனர். கந்தளாய் என்ற தமிழ் மாவட்டம் இப்போது தனிச்சிங்கள மாவட்டமாக மாறி விட்டது.

திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் காரணமாக தமிழர்களின் ஜனத்தொகை வீழ்ச்சியடைந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்ட இடத்தில ,இப்போது தமிழ் எம்.பி ஒருவரை தேர்வு செய்வதே கடினமாக உள்ளது. தம்பலகாமம் என்ற தமிழ் கிராமம் இப்போது தம்பகமுவ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கள கிராமமாக மாறி விட்டது.
யாழ்பாணத்தையும்

திருகோணமலையையும் இணைக்கும் மணல் ஆறு என்ற கிராமம் இப்போது வெலி ஓயா என சிங்கள பெயர் சூட்டப்பட்டு அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.

முள்ளிவாய்க்கால் யுத்தம் 2009 முடிந்த பின் முல்லைத்தீவிலும் சிங்கள குடியேற்றம் இரண்டு ஆட்சியாளர்களாலும் (மகிந்த மைத்திரி )முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திருகோணமலையில் கன்னியா என்ற இடத்தில் இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்த் ஏழு வெந்நீரூற்றுகள் உள்ளன. இங்குள்ள சிவன் கோயிலுக்கு மக்களை செல்ல விடாமல் தடுத்து விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதே போல் வவுனியாவில் வெடுக்கு நாறி மலை என்ற மலை மீது உள்ள சிவன் கோயிலில் புத்த பிக்குகள் புத்தருடைய விக்கிரகத்தை கொண்டு வந்து வைத்து பொலிஸாரின் உதவியுடன் தமிழர்களை (இந்துக்களை) கோயிலுக்கு செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். முல்லைத்தீவிலும் குருந்தூர் மலை என்ற இடத்தில் மலை மீது உள்ள சிவன் கோயிலில் புத்த பிக்குகள் புத்தருடைய விக்கிரகத்தை கொண்டு வந்து வைத்து போலிஸாரின் உதவியுடன் தமிழர்களை (இந்துக்களை) கோயிலுக்கு செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர்.

எல்லாம் முடிந்து இப்போது யாழ்ப்பாணத்திலும் மாதகல் என்ற கரையோர கிராமத்தில் உள்ள பறாளாய் முருகன் கோயிலிலும் புத்த பிக்குகள் சென்று புத்த மத அனுஷ்டானங்களை செய்துள்ளனர். இதனால் இந்தப்பகுதி மக்கள் இங்கேயும் சிங்கள குடியேற்றம் வந்து விடுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

இலங்கை இந்துக்கள் சைவ மட்டுமல்ல வைணவம் வழிபாடும் உண்டு.இலங்கையில் அதிகமாக இந்துக்கள் கூடும் ஆலயங்கள்

தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருத்தலம், வாயு பகவானால் உடைத்து வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்றான மலை, அகத்தியர் தவமியற்றிய பூமி, திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தேவாரத்தலம், திருப்புகழ் பாடல்பெற்ற கோவில், ராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம். லெட்சிமி நாராயணர் ஆலயம்.

வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னாரில் உள்ள ஒரு பழமையான  திருக்கேதீஸ்வரம் பண்டைய தமிழ் துறைமுக நகரங்களான மாந்தை மற்றும் குதிரைமலையை கண்டும் காணாத வகையில், இக்கோயில் இடிபாடுகளில் கிடக்கிறது தேவாரப் பாடல்களில் போற்றப்படும் சிவனின் 275 பாடல் பெற்ற தலங்களில் திருக்கேதீஸ்வரமும் ஒன்று.

நல்லூர் கந்தசுவாமி கோயில்
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில்
வற்றாப்பளை கண்ணகியம்மன்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயில்
திருக்கேதீச்சரம்
செல்வச் சந்நிதி கோயில்
புதூர் நாகதம்பிரான் ஆலயம் ஆகியனவாகும். இப்படியான கோவில் பல உண்டு. இதையும் அழிக்க முயற்சிகள் நடக்கின்றன…

#SriLanka

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்14 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2024, குரோதி வருடம் சித்திரை 6 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2024, குரோதி வருடம் சித்திரை 5, வியாழக் கிழமை, சந்திரன் கடகம், சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 17.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஏப்ரல் 17, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் கடக ராசியில் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார்....

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, 2024, சோபகிருது வருடம் சித்திரை...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.04.2024 – இன்று தமிழ் வருட பிறப்பு

​இன்றைய ராசி பலன் 14.04.2024 – இன்று தமிழ் வருட பிறப்பு இன்றைய ராசிபலன் ஏப்ரல் 14, 2024, சோபகிருது வருடம் சித்திரை 1, ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 12.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 12.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...