கட்டுரை
தீபாவளி கொண்டாட்டம் – கடந்து போன நாட்கள்
தீபாவளிக்கு சூரிய உதயத்திற்கு முன் நல்லெண்ணெய் குளியல், புத்தடை பின் அன்று, முதல் நாள் முதல் ஷோவிற்கு தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்துவிட்ட அன்றைய நாட்கள்….
கல்லூரி நாட்கள்…
இப்போது கடந்த 25 ஆண்டுகளாக இதில் பெரிய ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. கடந்து போன நாட்கள்…
1961ல் ‘தாய் சொல்லை தட்டாதே’, 1963ல் ‘கற்பகம்’, ‘அன்னை இல்லம்’, 1964ல் ‘நவராத்திரி’, ‘படகோட்டி’ ஆகியவை வெற்றி பெற்ற தீபாவளிப் படங்கள். தீபாவளி ரிலீஸாக முதன்முதலாக திரையிடப்பட்ட வண்ணப்படம் என்கிற பெருமையை ‘படகோட்டி’ தட்டிச் செல்கிறது.
1967 தீபாவளிக்கு வெளிவந்த ‘ஊட்டிவரை உறவு’, ‘இரு மலர்கள்’ இரண்டும் வெற்றிப்படங்கள் ஆயின. ‘நான்’, வெள்ளிவிழா கண்டது. ஒரே தீபாவளியில் வெளியான மூன்று படங்கள் வெற்றி காண்பது என்பது அபூர்வமான ஒரு நிகழ்வே.
தீபாவளிக்கு பொதுவாக பக்திப் படம் வெளியாவது அரிது. அப்படி அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வு 1971ல் நிகழ்ந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘ஆதிபராசக்தி’, இந்த தீபாவளிக்கு வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடியது.
அடுத்த ஆண்டு, 1972 தீபாவளிக்கு தேவரின் ‘தெய்வம்’ வெளியாகி நூறு நாள் ஓடியது. 1973ல் ‘பூக்காரி’, ‘கெளரவம்’, 1974ல் ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகியவை வெற்றிகரமான தீபாவளி ரிலீஸ்களாக அமைந்தன. 1977ல் ‘ஆட்டுக்கார அலமேலு’ தீபாவளி ரிலீஸாக வெளியாகி இருநூறு நாட்கள் ஓடியது.
இளையராஜாவின் 100வது படமான ‘மூடுபனி’ 1980ன் தீபாவளி ரிலீஸ் படமே. 1981 தீபாவளிக்கு வெளியான ஏழு படங்களுமே வண்ணப் படங்கள்தான். அதுவரை கருப்பு வெள்ளை படங்களும் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த தீபாவளியில் இருந்து எல்லா தீபாவளியுமே வண்ணமயமாய்தான் அமைந்தது.
‘தண்ணீர் தண்ணீர்’, ‘கீழ்வானம் சிவக்கும்’, ‘அஞ்சாத நெஞ்சங்கள்’ ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாய் அமைய, ‘அந்த ஏழு நாட்கள்’ வெள்ளிவிழா கொண்டாடியது. 1982 தீபாவளியில் மணிவண்ணன் இயக்குநராக அறிமுகமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ வெளியாகி இருநூறு நாட்கள் ஓடியது.
கடந்த கால நினைவுகள்….
நன்றி
எஸ்.கே. ராதாகிருஷ்ணன்
You must be logged in to post a comment Login