கட்டுரை
ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அசத்திய ஐபோன்!!

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாதிரிகள் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
ப்ளிப்கார்ட் தளத்தில், பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விற்பனையின்போது, பல்வேறு பொருட்களுக்கும், அபாரமான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 3ஆம் திகதி ஆரம்பமான இச் சிறப்பு விற்பனையில், இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஐபோன்-12 சீரிஸ் மாதிரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 சிறிய மாதிரிகள் அதிக தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன.
இதேவேளை, பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், ஐந்து பேருக்கு ஒரு வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட் போனை மாற்றி, புதிய ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்துள்ளதுடன், அப்பிள் நிறுவனம் மட்டுமன்றி சியோமி மற்றும் ரியல்மி நிறுவன மாதிரிகளும் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
You must be logged in to post a comment Login