இலங்கையை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்

Share

இலங்கையை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகப் புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்கள் இலங்கையிலிருந்து படகில் புறப்பட்டு இன்று (31.07.2023) காலை தனுஷ்கோடி-அரிச்சல்முனை கடற்கரையைச் சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த மரைன் பொலிஸார், அவர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாகத் தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...