இலங்கை
முல்லைத்தீவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருட்கள்
முல்லைத்தீவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருட்கள்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் இன்று(10.07.2023) மீட்க்கப்பட்டுள்ளன.
இதன்போது பெரிய பரா-13, சின்ன பரா – 01, 82MM, மோட்டார் – 49, 60MM, மோட்டார் – 01, ஆர் வி ஜி – 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல தொகை வெடிபொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் பெருமளவில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியதாக அறியமுடிகின்றது.
மேலும் கடந்த வியாழக்கிழமை(06.07.2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், இராணுவrத்திடம் சரணடைந்த பெண் போராளிகளுடையதா? அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையாதா, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
You must be logged in to post a comment Login